- Edition: 1
- Year: 2010
- Page: 176
- Format: Paper Back
- Language: Tamil
- Publisher: நிவேதிதா
மாமியாரம்மன்
ஒரு எழுத்தாளன் இன்னொரு எழுத்தாளனைப் பாராட்டுவது என்பதோ, எழுதச் சொல்லி ஊக்கப்படுத்துதல் என்பதோ அவ்வளவு சாதாரணமானதல்ல. அது நடைமுறையில் சாத்தியமும் அல்ல. ஒரு ஜவுளிக் கடைக்காரர் இன்னொரு ஜவுளிக்கடையின் துணிகள் குறித்து எப்படி பரிந்துரைக்க முடியும்.
அத்தகைய எழுத்துலக ஈகோ எதுவுமின்றி நண்பர் ஆர்னிகா நாசர் இன்னொரு நண்பரை ஊக்குவித்து சிறுகதை எழுத்தாளராக்கி இருக்கிறார். அவர் டாக்டர் ச.இராமசாமி. ஒரு மருத்துவர் எழுத்தாளராகப் பரிணாமம் அடையும்போது அவருக்கு எத்தனை கதாபாத்திரங்களின் அனுபவங்கள் வாய்க்கும். எத்தனை சுவையான சம்பவங்கள் கிடைக்கும். அவைகளைக் கோர்த்து இயல்பான நடையில் படிக்கத்தூண்டும் கதைகளாகப் படைத்துத் தந்திருக்கிறார். வாய் மருத்துவர் ச.இராமசாமி. சிறுகதை இலக்கியம் சற்றே தேக்கம் கண்டுள்ள தமிழ்ச்சூழலில் இந்தப் புதிய எழுத்தாளரை சந்தோஷ மாக வரவேற்கும் செயலே இக்கதைநூல் ஆக்கம்!. புதியன தோன்றல் மொழிக்கு ஆரோக்கியமானதுதானே!
மகிழ்வுடன்
எஸ்.ஆர்.சுவாமிநாதன்
Book Details | |
Book Title | மாமியாரம்மன் (Maamiyaaramman) |
Author | டாக்டர் ச.இராமசாமி (Taaktar Sa.Iraamasaami) |
Publisher | நிவேதிதா (Nivedhitha) |
Pages | 176 |
Year | 2010 |
Edition | 1 |
Format | Paper Back |