Menu
Your Cart

திரைவெளி: திரைப்படக் கட்டுரைகள்

திரைவெளி: திரைப்படக் கட்டுரைகள்
-5 %
திரைவெளி: திரைப்படக் கட்டுரைகள்
₹238
₹250
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹40 shipping fee* (Free shipping for orders above ₹500 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.
உலகத் திரைப்படங்கள் மற்றும் பிறமொழி இந்தியத் திரைப்படங்கள் குறித்த செய்திகளை விளக்கமாகக் கூறும் திரைப்பட நூல் திரைப்படம் பார்த்து விட்டு அந்தக் கதையை ஒருவர் சொல்ல மற்றொருவர் கேட்டு வியப்பது வகுப்பு வித்தியாசமற்று எல்லா இடங்களிலும் காணப்படுவது. அதை ஒரு வரிக் கதையாகச் சொல்லாமல் எந்த இடத்தில் பாட்டு வந்தது, சண்டை வந்தது இடைவேளை வந்தது என சஸ்பென்ஸ் குறையாமல் சொல்பவரையும் அவரது முகபாவங்களையும் கவனிக்க ரசனை மிகுந்ததாக இருக்கும். 1992லிருந்து 2006 வரை பதினைந்து வருடங்களாக பல்வேறு சிறு பத்திரிக்கைகளில் சுப்ரபாரதிமணியன் எழுதிய நாற்பது கட்டுரைகள், ஏறத்தாழ 108 படங்கள் பற்ரி 176 பக்கங்களில் வெளிவந்துள்ளன. விரிந்த பயணம், ஆழ்ந்த கவனம், ரசனையும், கடுமையான உழைப்பும் வாசகனுக்குக் கண்கூடாகின்றன. கட்டுரைகளின் தொனி எத்தகையது. அசோகமித்திரன் கட்டுரைகள் தனது கோணத்திலிருந்து உரையாடுவது போல ஒரு நிகழ்ச்சி பற்றிய கருத்தை அல்லது விவரத்தை முன் வைப்பது போல கட்டமைக்கப்பட்டிருக்கும். வாசகனுக்குச் சென்றடைய வேண்டிய பல்வேறு விடயங்களை , பல்வேறு பரிமாணத்தில் நெய்து அளித்திருப்பார். அதை உன்னிப்பாக வாசிக்கும் போதே உள்வாங்க இயலும். இந்நூலின் கட்டுரைகளின் பெரும்பகுதி நேரடியாக விடயத்திற்குச் சென்று திரை விமர்சனம் செய்து, அந்த மொழிப் படங்கள் பற்றிய மேலும் சில விபரங்களைச் சொல்லி அமைபவை. அவ்வாறெனில் சுப்ரபாரதிமணியனின் அசல் தொனி இதுதானா என்றால் இல்லை என்று இருபதாவது கட்டுரை ” ஒரு பயணம் இரு படங்கள் ‘ என்னும் கட்டுரை விடையளிக்கும். பிரான்சிலிருந்து ஜெர்மனி செல்லும் பயணத்தில் அவர் காணும் இரு படங்கள் பற்றியும் அந்தப் பயணம் தொடர்பாக அவர் தரும் விவரங்கள் அய்ரோப்பாவின் நிலை அங்கு வாழும் இந்தியர் பற்றிய அய்ரோப்பியர் கண்ணோட்டம் , தமிழரின் இருப்பு, இலங்கைத் தமிழரின் நிலை என பல கோணங்களில் நம் அறிவை வளப்படுத்துகிறது. மிகவும் சகஜமான தொனியில் நீளமே தெரியாத வண்ணம் விரியும் கட்டுரை.
Book Details
Book Title திரைவெளி: திரைப்படக் கட்டுரைகள் (thiraiveli)
Author சுப்ரபாரதிமணியன் (Suprabharathimanian)
Publisher நிவேதிதா (Nivedhitha)
Pages 270
Year 2021
Edition 1
Format Paper Back
Category Cinema | சினிமா, Essay | கட்டுரை

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha

By the same Author

புத்துமண்..
₹95 ₹100
சாயத்திரைவிளம்பர யுகத்தின் வண்ணங்கள் காட்டும் மாயையில் இன்று நாம் சிக்கியிருக்கிறோம். இந்த வானவில்லின் பின்னால் அனைத்தும் சோகம். இயற்கையைப் பார்த்து. அதைப் போல் தானும் வர்ணங்களை சிருஷ்டிக்க முடித்த மனிதன். புலியைப் பார்த்து பூனை சூடிட்டுக்கொண்டாற்போல் அவதியுறுவதை சுப்ரபாரதி மணியன் மறக்க முடியாத - அல..
₹185 ₹195
தேநீர் இடைவேளை...அவலங்களோடு வாழ்கிற எத்தனையோ பேரை சுப்ரபாரதிமணியன் இந்த நாவலில் சித்திரிக்கிறார். இந்த அவலங்கள் நம்மையும் பாதிக்கின்றன.இந்த நாவலை வாசிக்கும்போது நமக்குள்ளும் அவலம் எழுகிறது. தற்பெருமைகள் சொல்லி நம் அவலத்தை மறைத்துக்கொள்ள முடியாது. நமக்குள் நாமும் சிறுத்துக்கொண்டு இருக்கிறோம். சீரழிவு..
₹81 ₹85
சப்பரம்நெசவாளர் சமூகம் பற்றிய வறுமை தோய்ந்த சித்திரம், குடியால் அழியும் குடும்பம், முதிர்கன்னிப் பெண்ணின் அவலநிலை என்பதை நாவல் சொல்கிறது.நல்ல திரைப்படம் போல் இந்த நெசவாளர் பற்றிய நாவல் விரிந்து செல்கிறது. கடவுள் சிலைகளைச் சுமக்கும் கோயில் சப்பரங்கள் தோளில் பாரமாகக் கிடக்கும். இந்த நாவல் “சப்பமரம்” ம..
₹95 ₹100