Menu
Your Cart

நிழலின் தனிமை

நிழலின் தனிமை
-5 %
நிழலின் தனிமை
தேவிபாரதி (ஆசிரியர்)
₹209
₹220
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
ஓர் அபத்தமான நாள் முப்பது வருட நீட்சியுடன் முடிவடையாமல் தொடர்வது எப்படி? அது முடிவடையும் கணத்தில் மானுடக் கருணையின் மாபெரும் வெறுமை கவிவது ஏன்? இந்த இரண்டு கேள்விகளுக்கு இடையிலான பதிலைத் தேடுகிறது ‘நிழலின் தனிமை’. காமம், அதையொட்டிய அதிகாரம், அதற்கெதிரான வஞ்சினம், பழி தீர்க்கும் வெறி என்று மன இருளின் வெவ்வேறு நிற பேதங்களைச் சொற்கள் மூலம் உருவாக்குகிறது இந்த நாவல். தாம் மட்டுமே அறிந்த இருளுக்குள் தீர்மானத்துடனும் நோக்கமின்றியும் இயல்பாக நடமாடும் வெவ்வேறு பாத்திரங்கள் அந்த நிழல் நிறச் சொற்களை இயக்குகிறார்கள். வார்த்தைகளுக்குள் வசப்பட மறுக்கும் கொந்தளிப்பை காட்சிகளாகவும் அந்தக் காட்சிகளை உண்மையின் விசாரணைகளாகவும் முன்வைப்பதில் தேவிபாரதி அடைந்திருக்கும் வெற்றிக்குச் சாட்சியுமாகிறது நாவல். உள் அடுக்குகளில் நுட்பமாக நிகழும் உளவியல் அலசலும் சமூக விமர்சனமும் புனைவைக் கதை கடந்த எல்லைக்குக் கொண்டுசெல்கின்றன. மனித மனத்தின் ததும்பல்களையும் சீற்றத்தையும் பகையையும் வேட்கையையும் தந்திரத்தையும் அவமானத்தையும் தோல்வியையும் இவ்வளவு தீவிரத்துடன் வெளிப்படுத்தும் படைப்பு இது.
Book Details
Book Title நிழலின் தனிமை (Nizhalin Thanimai)
Author தேவிபாரதி (Devibharathi)
ISBN 9789380240824
Publisher காலச்சுவடு பதிப்பகம் (Kalachuvadu Publications)
Pages 176
Published On Nov 2010
Year 2011
Edition 2
Format Paper Back
Category Novel | நாவல், Classics | கிளாசிக்ஸ், Staff Picks

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha

By the same Author

தேவிபாரதியின் சிறுகதைகள் கதையாடல் என்ற அளவில் தெளிவாகக் கட்டமைக்கப்பட் டிருப்பவை. பெரிதும் ஆண்-பெண் உறவுகளை மையமாகக் கொண்டுள்ள அவரது கதை கூறல் முறை ஒரு குறுகிய வெளியில் இறுக்கமான முடிவை நோக்கி இழுத்துச் செல்லப்படும் பிரமையை ஏற்படுத்துகிது. நவீனத்துவவாதிகளில் பலருடையதையும் போல த்ரில்லருக்கான கூறுக..
₹238 ₹250
அரசியல் விதிவிலக்கில்லாமல் எல்லோரது வாழ்வையும் பாதிக்கிறது. முக்கியமாக அது எல்லாவற்றையும் தீர்மானிக்கும் சக்தியாக இருக்கிறது. அதனோடு எவ்விதத் தொடர்பும் வைத்துக்கொள்ள விரும்பாதபோதும் அது எல்லோரையும் உருக்குலைக்கிறது. அரசியலற்ற ஒரு கருத்தோ செயலோ அநேகமாக இல்லை என்னும் கருத்து எந்த அளவுக்குப் பழ..
₹171 ₹180
நடராஜ் மகராஜ்தேவிபாரதி என்ற எழுத்தாளரின் ஆக மேலான படைப்பு நட்ராஜ் மகராஜ் என்ற எண்ணுகிறேன் கதையாடலில் நிகழ்த்தியிருக்கும் புதுமையிலும் கதைமாந்தர்களை உருவாக்கியிருக்கும் நேர்த்தியிலும் மொழியைப் பயன்படுத்தியிருக்கும் துள்ளியத்திலும் செழுமையிலும் இந்த நாவல்...
₹371 ₹390