Menu
Your Cart

நூறு பிள்ளைகள் பெற்றவள்

நூறு பிள்ளைகள் பெற்றவள்
-5 %
நூறு பிள்ளைகள் பெற்றவள்
₹190
₹200
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹40 shipping fee* (Free shipping for orders above ₹500 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.
"சோத்துக்கா அலையுறேன். எத்தன நாளைக்கு ஏம்புள்ளைகள பட்டினி போட்டிருக்கேன். ஏம்புருஷன் செத்து பதினேழு வருஷம் முடிஞ்சுப்போச்சு. அந்த மனுஷன் சாகுறப்ப பெரியவளுக்கு அஞ்சுவயசு. ஒருத்தி பால் குடிக்கிறா. இன்னொருத்தி தோள்ல தூங்குறா. இவளுக எவளுக்காச்சும் அந்தாளு மூஞ்சியத் தெரியுமா. அப்பா இல்லாத கவலயோடவா வளத்தேன். உடம்புலயிருக்கிற ரத்தமெல்லாம் தண்ணியா கொட்டும். அம்புட்டு வேலை. வேலைன்னா ஒருநா, ரெண்டுநா வேலையா. வருஷம் முன்னூறு நாளும் வேலை. நாத்து நட்டேன், பருத்தி எடுத்தேன், சானி செமந்தேன், வெறகா வெட்டுறதுக்குப் போனேன். அடீ ஆத்தீ எம்புட்டு வேலை. எல்லாம் எதுக்குடீ புள்ளைகக் கேட்டதும் இல்லைன்னு சொல்லாமே வாங்கிக் கொடுக்கணுமுங்கிற வைராக்கியம். நாலு தோசைய சுட்டு நானும் ஏம்புருஷனும் ஆளுக்கு ரெவ்வண்டு தின்னுட்டு, அரை வவுறும் காவவுறுமா பொழைச்சுக்கிடந்தோம், அந்த மந்தையில. ஒருத்தன் வந்து என்னான்னு கேட்டிருப்பானா இல்ல பாத்திருப்பானா. இன்னைக்கு ஏம்புள்ளக குமரிகளாகி லெட்சணமா தளதளன்னு கண்ணுக்குத் தெரியவும் ஆளு மாத்தி ஆளு வந்துட்டுப் போறாங்ஙே நீட்டிக்கிட்டு" 'நூறு பிள்ளைகள் பெற்றவள்' கதையிலிருந்து...
Book Details
Book Title நூறு பிள்ளைகள் பெற்றவள் (Nooru Pillaigal petraval)
Author எஸ்.செந்தில்குமார் (S.Senthilkumar)
Publisher எழுத்து பிரசுரம் | Zero Degree Publishing (Ezhuthu Pirasuram | Zero Degree Publishing)
Year 2023
Edition 1
Format Paper Back
Category Short Stories | சிறுகதைகள், 2023 New Arrivals

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha

By the same Author

செந்தில்குமாரின் கதைவெளி நுட்பமானது. வாழ்வின் எல்லா ரகசியங்களையும் தமக்குள் ஒளித்து வைத்துக்கொண்டிருப்பவை அவரது பாத்திரங்கள். அந்த ரகசியங்களை அறிந்துகொள்ளும் வேட்கையே அவரது படைப்புச் செயல். வாழ்வை அதன் கடைசித் துளிவரைப் பருகத் துடிக்கும் தன் பாத்திரங்களை அமைதியாகப் பின்தொடர்ந்து செல்லும் செந்தில..
₹95 ₹100
தமிழ் வாழ்க்கையின் வினோதமான, உலர்ந்த பக்கங்களை எழுதிச் செல்லும் இளம் தலைமுறைப் படைப்பாளிகளில் எஸ்.செந்தில்குமார் தனித்த அடையாளம் கொண்டவர். கதையின் உள் மடிப்புகளைக் கலைத்து விரித்துக்கொண்டே செல்லும் இவரது மொழி இடையறாத வளையங்கள் உருவாகும் நீர்ப் பரப்பாக மாறிவிடுகிறது. அதனால் கதைகள் தாம் துவங்கிய திடப்..
₹71 ₹75
கழுதைகள் மேடேற மேடேற முதுகிலிருந்த சுமை நழுவிப் புட்டத்துப் பக்கமாகச் சரிந்தது. கீழே தவறிவிழாமல் ‘நெஞ்சுக்கவுறுகட்டு’ பிடித்து நிறுத்தியது. கழுத்தோடு சேர்ந்து கட்டிய நெஞ்சுக்கவுறுகட்டு உயிர்போகிறதுபோல, அழுத்திப்பிடித்தது. கழுதைகள் வலியோடு மலையேறின. புட்டத்துப் புண்ணின் மேல் விழுந்த கயிறுகட்டு அழுத்த..
₹356 ₹375