- Edition: 1
- Year: 2013
- Page: 40
- Format: Paper Back
- Language: Tamil
- Publisher: அகநாழிகை
கண்ணகி வழிபாடு
‘கண்ணகிக்குக் கோயிலுண்டா?’ என்ற தலைப்பில் 1946 ஆகஸ்ட் ‘தமிழ் முரசு’ இதழில், சிலம்புச் செல்வர் ம.பொ.சிவஞானம் எழுதிய கட்டுரையின் விரிவே இச்சிறு நூல்.
சிலப்பதிகாரத்தில் வரும் கண்ணகி தேவி, தமிழ்நாட்டின் வீர பத்தினியாவள். அவ்வீராங்கனையின் அறக்கற்பும், அரசியல் புரட்சியும் எந்நாட்டவரும், எக்காலத்தவரும் போற்றுதற்கும் பின்பற்றுதற்கும் உரியனவாகும்.
‘’செங்குன்றத்தில் வாழும் வேடுவர்களே! இந்தப் பத்தினியைப் போன்ற ஒரு தெய்வம் நமது குலத்திற்கு வேறு இல்லை. ஆகவே, வேடுவ குலத்தீர்! இவளை நம் குலத் தெய்வமாகக் கொள்ளுங்கள்! குறிஞ்சிப் பறை கொட்டுங்கள்! சிறுபறை முழங்குங்கள்! கொம்பு ஊதுங்கள்! ஒளியெழுப்பும் மணியினை அடியுங்கள்! குறிஞ்சிப்பாடல்களைப் பாடுங்கள்! நங்கைக்கு நறும்புகை காட்டுங்கள்! மலரணி செய்யுங்கள்! சுற்றி மதிலெழுப்பி வாயில் வைத்துக் கோயில் கட்டுங்கள்! புகழுரை கூறிப் போற்றுங்கள்! ஒரு முலையிழந்த நங்கைக்கு நம் பெருமுலை குறையாத வனத்தைத் தருவதாக என்று வாழ்த்துங்கள்!’ எனக் குன்றக் குறவர் ஒருங்குகூடி, மறைந்த மாபத்தினியாம் கண்ணகியை வாழ்த்தி ஆடிப்பாடி அகமகிழ்ந்தனர்.
Book Details | |
Book Title | கண்ணகி வழிபாடு (Kannagi Vazhipadu) |
Author | ம.பொ.சிவஞானம் (Ma.Po.Sivagnaanam) |
Compiler | தி.பரமேஸ்வரி (T. Parameswari) |
Publisher | அகநாழிகை (Aganazhikai) |
Pages | 40 |
Year | 2013 |
Edition | 1 |
Format | Paper Back |
Category | குறுநாவல் |