- Edition: 1
- Year: 2011
- Page: 112
- Format: Paper Back
- Language: Tamil
- Publisher: வாசல் படைப்பகம்
நட்சத்திரம் விழும் நேரத்தில்
மனதின் பரிசுத்தம் வேண்டுகிற குரல்தான் கிரேஸியின் கதைகளுக்கு அடியில் ஓடுகிற நதி. மனித மனதில் இன்னும் கரையாமல் தேங்கியிருக்கும் கசடுகளின் கீறல்கள் இந்தக் கதைகள்.
நினைவின் தடாகத்தில் மிதக்கும் கசடுகளின் பாசி கிழித்து மனிதரைப் பரிசுத்தமாக்க பகிர்ந்து கொள்ளும் சொற்களால் முடிகிறது.
காத்திருப்போரும், மெளனிகளும் தென்பட்டு மறையும் இந்தக் கதைகளில் விரல்களுக்கிடையே பிளேடுகளை மறைத்திருப்போரும், தமக்குள் அசையும் பெண்டுலம் உடைந்தோரும், திருடர்களும் ஏமாளிகளும் நாம் கரிசனத்துடன் பொருட்படுத்த வேண்டியவர்கள்.
இவர்கள் கால்வைத்த இடத்திலெல்லாம் நிலம் சரிகிறது. பறக்கத் துவங்கினால் இறக்கை முறிகிறது. ஒரு பொழுதைக் கடப்பது இவர்களுக்கு ஒரு யுகத்தைக் கடப்பதுபோல.
நம்பி விட முடியாத மனிதர்களின் மனதில் அலையும் இருட்காற்றும் அதைவெல்லும் ஒளிக்காற்றும் இந்தக் கதைகளில் வீசுகிறது.
Book Details | |
Book Title | நட்சத்திரம் விழும் நேரத்தில் (Natchathiram Vilum Nerathil) |
Author | கிரேஸி (Kiresi) |
Translator | உதய்சங்கர் (Uday Shankar) |
Publisher | வாசல் படைப்பகம் (Vaasal Padaippagam) |
Pages | 112 |
Year | 2011 |
Edition | 1 |
Format | Paper Back |
Category | குறுநாவல், Malaiyala Translation | மலையாள மொழிபெயர்ப்பு |