Menu
Your Cart

விஸ்வரூபம்

விஸ்வரூபம்
-5 %
விஸ்வரூபம்
இரா.முருகன் (ஆசிரியர்)
₹594
₹625
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
FREE shipping* (within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.
கவிதை, கட்டுரை, நாவல், திரைப்படம் என்று படைப்புலகின் அத்தனை சாத்தியங்களையும் வெற்றிகரமாகக் கையாண்டு வரும் இரா. முருகன் தற்போது எடுத்திருக்கும் விஸ்வரூபம், தமிழ் இலக்கியப் பரப்பில் ஓர் முக்கிய மைல்கல். மேஜிகல் ரியலிசத்தின் சுவையை உணர இனி ஆங்கில நாவல்களையோ மொழிபெயர்ப்புகளையோ நாட வேண்டியதில்லை. இது ஒன்று போதும். 19ம் நூற்றாண்டின் மையத்தில் சுழலும் இந்தப் பிரம்மாண்டமான நாவல், காலத்தில் முன்பும் பின்பும் இயல்பாக நகர்ந்து சில கண்ணிகளை முடிக்கவும் அவிழ்க்கவும் செய்கிறது. தனது வம்சாவளியிடம் இருந்து பெற்ற விஷயங்களே இந்தக் கதை என்கிறார் இரா. முருகன். ஆறுக்கும் மேற்பட்ட மொழி நடைகள். ஐம்பதுக்கும் மேற்பட்ட கதாபாத்திரங்கள். 3 நாடுகள், 8 ஊர்கள், 4 கலாசாரச் சூழல்கள் ஊடே 6 இழைகளாகக் கடந்து போகிறது இந்தக் கதை. நகைச்சுவை என்னும் மெல்லிய நூலிழை அனைத்துப் புள்ளிகளையும் சாதுரியமாக ஒன்றிணைக்கிறது. அரசூர் வம்சத்தின் தொடர்ச்சியாக விரியும் விஸ்வரூபம் பரவசமளிக்கும் ஒரு வாசிப்பனுபவத்தை அளிக்கக் காத்துக்கொண்டிருக்கிறது. காசர்கோட்டு குடும்பத்தோடு சேர்ந்து ஒரு சுவாரஸ்யமான மாந்தரீக யதார்த்த உலகத்துக்குள் அடியெடுத்து வைக்க அன்புடன் அழைக்கிறோம்!
Book Details
Book Title விஸ்வரூபம் (Vishvaroopam)
Author இரா.முருகன் (R.Murugan)
ISBN 9788184937497
Publisher கிழக்கு பதிப்பகம் (Kizhakku Pathippagam)
Pages 792
Published On Nov 2012
Year 2013
Category Novel | நாவல்

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha

By the same Author

லண்டனின் சரித்திரத்தில் புராணக் கதை நெடி கிடையாது. அதன் சரித்திரம் ஆரம்பிப்பது கிறிஸ்து பிறந்த முதல் நூற்றாண்டில்தான். ரோமானியர்களின் ஆரம்ப கால ஆட்சியிலிருந்து நாம் நன்கறிந்த விக்டோரியா மகாராணியின் ஆட்சி வரையிலான லண்டனின் வரலாற்றை ஒரு கதாகாலட்சேபம்போல இந்தப் புத்தகம் விவரித்துச் செல்கிறது. இது புத்த..
₹171 ₹180
ப்ராஜக்ட் மேனேஜ்மெண்ட்..
₹166 ₹175
இந்தப் புதினம், எமர்ஜென்சி என்ற நெருக்கடி நிலைக் காலத்தின் வரலாறு அல்ல. எமர்ஜென்சியின்போது நிகழ்கிற சம்பவங்களின், புனைவு பொதிந்த தொகுதி. வாழ்க்கையை ஓரளவு பிரதிபலித்து அதில் வண்ணம் கலக்க ஒரு முயற்சி, இந்தச் சிதறுண்ட கதை கூறுதல். ஒரு தளத்தில், இவை பார்வைப் பதிவுகளின் சங்கிலிப் பின்னலும் கூட. இரா.மு..
₹428 ₹450
இரா.முருகன், சிற்றிதழ்களின் பொற்காலத்தில் எழுத வந்தவர். சிற்றிதழோ பேரிதழோ கதைகளை நிர்ணயிப்பதில்லை என்று நிரூபித்த சில தீவிர இலக்கியவாதிகளுள் ஒருவர். இவரது சிறுகதைகளுக்குள் நிகழும் உரையாடல்கள் தனித்துவமான சிறிய உலகை உருவாக்கும் தன்மை கொண்டவை. ஒவ்வொரு சிறுகதைக்கும் இரா.முருகன் கையாளும் நடை தேர்ந்த எழு..
₹238 ₹250