- Edition: 1
- Year: 2012
- Page: 96
- Format: Paper Back
- Language: Tamil
- Publisher: ஓவி பதிப்பகம்
அடிக்கு அடி
நேரில், நண்பர் முத்துகந்தன் அடி, வெட்டு, அறிவியல்படி, சூது, மழி என படபடத்துப் பேசி கேட்டதில்லை… பொதுவாக, அவரது கவிதைகள் யதார்த்த நிகழ்வினை முன்னிறுத்திச் சமூக ஏற்றத் தாழ்வினைக் கேலி செய்வன… அடிக்கு அடி கவிதை தொகுதியில் கவிதைக்கான திறந்த மனது மூர்க்கமாய், இணக்கமாய், இறுக்கமாய், இலகுவாய், எதிரும் புதிருமாய்ச் சூழலும் முனைப்பில் முத்துவின் இயல்பான கேலி மறைந்து ஒலிக்கிறது…
-ஓவியர் சந்ரு
தமிழ் நாடிப்போ
தமிழே ஜாதியானால்
தயங்காமல் திரும்பு
என்ற மூன்று வரிகளும் இன்றைய தமிழ்த் தேசிய இயக்கங்கள் சாதியக் கொடுமைகளைக் கண்டுகொள்ளாதிருப்பதையும் சில இயக்கங்கள் சாதி அமைப்புகளாகவே செயல்படுவதையும் நினைவுறுத்துகின்றன. ஒருவகையில் தமிழ்த் தேசிய இயக்கங்களுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கையாகவும், தலித் மக்களுக்கு ஊட்டப்பட்ட விழிப்புணர்வாகவும் கொள்ளவேண்டும்.
-கவிஞர் இன்குலாப்
அடிக்கு அடி என்று முதல் அடி எடுத்து மூன்றே அடிகள் கொண்ட எண்பத்து ஐந்து முத்துக்களை இங்குப் படைத்திருக்கிறார் முத்து. இது கவிதையா,பழமொழியா, புதிரா இவற்றையெல்லாம் மீறிய புதுமைப் படைப்பா என்று வியந்து கொண்டே படியுங்கள். பத்து நிமிடத்திற்குள் எல்லாவற்றையும் தாராளமாகப் படித்து முடிக்கலாம். தலைமைச் சொரிந்து யோசித்து முடிக்க பத்து நாட்கள்கூட ஆகலாம். முத்து சொல்லுவார் தள்ளிப்போடாதே. தள்ளினால் போட்டுத்தள்ளு.
-பேரா.பா. தயானந்தன்
Book Details | |
Book Title | அடிக்கு அடி (adikku adi) |
Author | சி.முத்துகந்தன் (C.Muthukandhan) |
Publisher | ஓவி பதிப்பகம் (oovi pathipagam) |
Pages | 96 |
Year | 2012 |
Edition | 1 |
Format | Paper Back |