-5 %
தற்செயல் பிரதமர்: மன்மோகன் சிங்
₹380
₹400
- Year: 2016
- ISBN: 9788183689724
- Page: 366
- Language: தமிழ்
- Publisher: கிழக்கு பதிப்பகம்
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
ஒரே சமயத்தில் பிரதமர் அலுவலகத்திலும் பொதுமக்கள் மத்தியிலும் விற்பனை ரீதியிலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய புத்தகம் இது. உண்மையல்ல, வெறும் கதை என்று உதறித் தள்ளியது பிரதமர் அலுவலகம். ஆனால் மற்றவர்களோ, தனிப்பட்டமுறையில் மன்மோகன் சிங் பற்றியும் அவருடைய ஆட்சி பற்றியும் உள்ளது உள்ளபடிச் சொல்லும் முதல் நூலாக இதனைக் கண்டனர், வரவேற்கவும் செய்தனர். நூலாசிரியர் சஞ்சய பாரு மன்மோகன் சிங்கின் ஊடக ஆலோசகராகப் பணியாற்றியவர் என்பதால் மிக அருகிலிருந்தபடி பிரதமரையும் பிரதமரின் அலுவலகச் செயல்பாடுகளையும் அவரால் நேரடியாகவே காணமுடிந்தது. அதனாலேயே அவர் விவரிக்கும் நிகழ்வுகள் நம்பகத்தகுந்தவையாகவும் நேர்மையாகவும் வியப்பூட்டும்படியாகவும் இருக்கின்றன. மன்மோகன் சிங் எப்படிப்பட்டவர்? அவருடைய ஆட்சியை எப்படி மதிப்பிடுவது? உலகமே வியக்கும் பொருளாதார மேதையாக இருந்ததும் ஏன் அவர் அரசியல் களத்தில் பல்வேறு தடுமாற்றங்களைச் சந்தித்தார்? அமைச்சர்களுடனான அவருடைய உறவு ஏன் சுமுகமாக இருக்கவில்லை? இடதுசாரிகளுடனான உறவு, அமெரிக்காவுடனான அணு சக்தி ஒப்பந்தம் போன்ற கொந்தளிப்பான விஷயங்களை அவர் எப்படிக் கையாண்டார்? கட்சித் தலைவர் சோனியாவுக்கும் ஆட்சித் தலைவர் மன்மோகன் சிங்குக்கும் இடையிலான உறவை எப்படிப் புரிந்துகொள்வது? மன்மோகன் சிங் குறித்து மட்டுமல்ல முந்தைய இந்தியப் பிரதமர்கள் குறித்தும்கூட இப்படியொரு விரிவான, நுட்பமான பார்வையை வெளிப்படுத்தும் புத்தகம் இதுவரை வந்ததில்லை. அந்த வகையில் இந்திய அரசியலை நுணுக்கமாகப் புரிந்துகொள்ளவும் இந்தப் புத்தகம் உதவும்.
Book Details | |
Book Title | தற்செயல் பிரதமர்: மன்மோகன் சிங் (Tharseyal Pirathamar Manmohan Singh) |
Author | சஞ்சய பாரு (Sanjaya Paaru) |
Translator | பி.ஆர்.மகாதேவன் (P.R.Mahadevan) |
ISBN | 9788183689724 |
Publisher | கிழக்கு பதிப்பகம் (Kizhakku Pathippagam) |
Pages | 366 |
Year | 2016 |