Menu
Your Cart

நோய்க்கு மருந்தாகும் ஆலயங்கள்

நோய்க்கு மருந்தாகும் ஆலயங்கள்
-5 %
நோய்க்கு மருந்தாகும் ஆலயங்கள்
பி.சுவாமிநாதன் (ஆசிரியர்)
₹133
₹140
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹40 shipping fee* (Free shipping for orders above ₹500 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.
இந்தியாவில் உள்ள நவீன மருத்துவமனைகள் முதல் அநேகமாக எல்லா மருத்துவமனை வளாகத்திலும் நிச்சயம் ஏதோ ஒரு கோயில் இருக்கும். காரணம் மக்களின் நம்பிக்கை. ஒரு நோய் குணமாக மருந்து மாத்திரைகள் பாதி காரணமாக இருக்கின்றன. மீதி காரணம், மருத்துவத்தின் மீதும் மனித சக்திக்கு அப்பாற்பட்ட இறையின் மீதும் பாதிக்கப்பட்டவர் கொண்டுள்ள நம்பிக்கை. ‘நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்’ என்பார்கள். ஆனால், இன்றைய நிலைமை அப்படியா? ஈட்டும் செல்வத்தில் பெரும் பகுதி நோய் தீர்க்கவே தீர்ந்துபோகிறது. வசதி படைத்தவர்கள் பெரிய பெரிய மருத்துவமனைக்குச் சென்றுவிடுகிறார்கள். ஏழை எளியோர், தங்களுக்கு ஒரு நோய் வந்தால் தங்கள் இஷ்ட தெய்வத்தின் சந்நிதிக்குச் சென்று வேண்டுவது தொன்றுதொட்டு இருந்து வரும் வழக்கம். தமிழ்நாட்டில் மருத்துவமனைகள் அதிகம் இல்லாத காலத்தில் கிராம மக்கள் நாடிச் சென்றது நாட்டு மருத்துவத்தையும் கோயில்களையும்தான். அவர்களுக்கு மனதளவில் முதல் மருத்துவர் கடவுளர்தான். ‘நேர்த்திக் கடன்’ செலுத்துகிறேன் என்று அவர்கள் வேண்டிக் கொள்ளும்போதே, அவர்களின் பாதிப்பு பாதி குறைந்து விட்டதாக நம்புகிறார்கள். பக்தர்களின் பிணி அகற்றி நலம் நல்கும் கோயில்கள் தமிழ்நாட்டில் அதிகம் இருக்கின்றன. அப்படியான சில கோயில்களின் வரலாற்றையும் அந்தத் தெய்வங்கள் நோய்களைத் தீர்த்துவைக்கும் மகிமை பற்றியும் கூறுகிறது இந்த நூல். பிணி நீக்கும் திருப்பணியாற்றும் ஆலயங்கள் பற்றி அறிந்துகொள்ள வாருங்கள்!
Book Details
Book Title நோய்க்கு மருந்தாகும் ஆலயங்கள் (Noikku marunthagum alayangal)
Author பி.சுவாமிநாதன் (P.Swaminathan)
Publisher விகடன் பிரசுரம் (Vikatan Prasuram)
Edition 1
Format Paper Back
Category ஆன்மீகம்

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha

By the same Author

இறையருள் பெற்று இனிமையுடனும் நிம்மதியுடனும் வாழ்வதற்கு நமது சாஸ்திரத்திலும் வேதங்களிலும் ஏராளமான வழிமுறைகள் சொல்லப்பட்டிருக்கின்றன. அவற்றுள் க்ஷேத்திராடனம் முக்கியமான ஒன்று. தரிசனம் செய்ய வேண்டிய புனிதத் தலங்கள் என்று காசி, ராமேஸ்வரம் போன்று பல இடங்கள் சிறப்பித்துச் சொல்லப்படுகின்றன. இத்தகைய தலங்களு..
₹157 ₹165
ஆலயங்கள் நாகரிகத்தின் துவக்கம். மன்னர்களும் மக்களும் ஆலயங்களில்தான் கூடினார்கள்; ஒன்றிணைந்தார்கள். அமைதிக்கு வித்திட்டார்கள். சிற்பக்கலையை நிலைபெறச் செய்தார்கள். ஆடற்கலையை அரங்கேற்றினார்கள். மன்னர்களின் புகழை கல்வெட்டுகளில் பதித்தார்கள். பண் இசைத்தார்கள். ஆன்மிகத்தை வளர்த்துப் போற்றினார்கள். நமது கல..
₹105 ₹110