Menu
Your Cart

பாலைநிலவன் தேர்ந்தெடுக்கப்பட்ட கவிதைகள்

பாலைநிலவன் தேர்ந்தெடுக்கப்பட்ட கவிதைகள்
-5 %
பாலைநிலவன் தேர்ந்தெடுக்கப்பட்ட கவிதைகள்
பாலை நிலவன் (ஆசிரியர்)
₹238
₹250
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹40 shipping fee* (Free shipping for orders above ₹500 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.
2023ம் ஆண்டுக்கான தன்னறம் இலக்கிய விருது கவிஞர் பாலைநிலவன் அவர்களுக்கு வழங்கப்படுகிறது. தமிழ் இலக்கியத்தில் தொண்ணூறுகளின் காலகட்டத்தில் படைப்பாளியாக எழுந்துவந்த கவிஞர்களில் பாலைநிலவன் குறிப்பிடத்தக்கவர். கடந்த முப்பது ஆண்டுகளுக்கும் மேலாகப் பாலைநிலவனின் கவிதைகள் தமிழ் கவிதைப்பரப்பில் தனக்குரிய தனிநிலத்தை அகழ்ந்தெடுத்து நிற்கின்றன. தனிமை, சிதைவுகள், நிராசைகள், வாழ்வுத்துயர், சகமனித துக்கம் என இவருடைய கவிதைகளின் பாடுபொருட்கள், எக்காலத்தும் இம்மண்ணில் மனிதரை அலைக்கழிப்பவைகளாக உள்ளன. அக்கவிதைகள் வழியாக இவர் தொட்டுக்காட்டிய புனைவுண்மைகள் அனைத்தும் சிதைவின் ஆழத்தை முன்வைப்பவை. உலகளாவிய தமிழ் இலக்கியப் பரப்பை மூர்க்கமாக வெளிப்படுத்தும் நோக்குடன் ‘நீட்சி’ எனும் சிற்றிதழைத் தொடங்கினார். ‘படைப்பு ஆவேசத்தை வாழ்வுகதியில் மீட்டெடுக்க வேண்டிய காலம்’ என்ற தலையங்கத்தில் எழுதியவர். ஆவேசமும் தன்விடுவிப்பும் கொண்டு இலக்கியத்தின் உள்ளோட்டத்தில் பாய்ச்சலை நிகழ்த்த முயன்றவர்களில் கவிஞர் பாலைநிலவனும் முதன்மையானவர். அதற்கென அவர் தேர்ந்தெடுத்த படைப்புமொழியும் சுயவாழ்வின் வதைகளளித்த வைராக்கியத்திலிருந்து உருவாகியது. கள்ளி முட்களுக்குள் நெளியும் நாகம் போல மொழியை இவரது கவிதைகள் கையாள்கின்றன காற்றின் தீநாவு ஆகவும், கடலின் உப்பு ஆகவும் கவிதையை கண்டடைகிற படைப்புமனம் பாலைநிலவனுடையது. கடலில் திடீரென எதிர்ப்படும் சுறாவைப் போல அன்றாடம் பயன்படுத்தும் சாதாரணச் சொற்களை கவிதையில் எதிர்கொள்வதாக ஓர் முன்னுரைக் குறிப்பில் எழுதியிருக்கும் பாலைநிலவன் சித்தரிக்கும் அகநிலம் என்பது சிதிலங்கள் துயரழுத்தமும், அதிலிருந்து விடுபடத்தவிக்கும் எத்தனிப்பும் நிறைந்தவை. அவ்வகையில் அவர் மிக முக்கியமான படைப்பாளியாக நம்முன் எளிமையைச் சுமந்தலைகிறார். எத்தகு எதிர்மைகள் சூழ்ந்தாலும் வாழ்வென்பதை அன்பின் பரவல்வெளியாக காணச்செய்யும் ஓர் மாற்றுப்பார்வையும் இவரது கவிதைகள் வழங்கத்தவறுவதில்லை.
Book Details
Book Title பாலைநிலவன் தேர்ந்தெடுக்கப்பட்ட கவிதைகள் (Paalainilavan therthedukapata kavithaigal)
Author பாலை நிலவன் (Palai Nilavan)
Publisher தன்னறம் நூல்வெளி (Thannaram Publications)
Year 2024
Edition 1
Format Paper Back
Category Poetry | கவிதை, 2024 New Releases

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha

By the same Author

தொண்ணூறுகளில் மலர்ந்த குறிப்பிடத்தகுந்த இளம் கவிஞர்களில் ஒருவர் பாலை நிலவன். தனக்கேயான அவலங் களையும் துக்கங்களையும் கனவுகளையும் யாவருக்குமான கவிதையனு பவங்களாக உருமாற்றம் செய்யும் கலைநுட்பம் இவருக்கு இயல்பாகவே கைகூடியிருக்கிறது. இந்தத் தொகுப்பில் பாலைநிலவனின் ‘கடல்முகம்’, ‘சாம்பல் ஓவியம்’ தொகுதிகள..
₹76 ₹80
பசியை ரத்தத்தால் தொடுவது - பாலை நிலவன் (கவிதைகள்):"எழுதும் கலை" என்ற கவிதையின் பிற்பகுதியில் சொல்லிற்கும் அது குறிப்பீடு செய்வதற்குமிடையே உள்ள இடைவெளியைப் பற்றிச் பேசும் அற்புதமான இக்கவிதை மலர்ச்சியுற்றிருக்கிறது.'வியக்கிறார் போர்ஹே’ என்ற புள்ளியில் துவங்கி மலை/வலி/மரணம்/ என்பதைத் தொடர்ந்து கதை எழுத..
₹114 ₹120
(கோணங்கியின் புனைவுலகு குறித்த கட்டுரை தொகுப்பு )..
₹589 ₹620