- Edition: 1
- Year: 2016
- Format: Paper Back
- Language: Tamil
- Publisher: நற்றிணை பதிப்பகம்
படைப்பாளிகள் உலகம்
ஒரு கதாசிரியன் எவ்வளவுதான் கதைகள் எழுதினாலும் ஒரே கதையைத்தான் மா(ற்)றி மா(ற்)றி எழுதுகிறான் என்ற கூற்றில் உண்மையில்லை என்று கூறிவிடமுடியாது. இதையே இன்னும் சிறிது விஸ்தரித்தோமானால் அவன் என்ன எழுதினாலும் அது அந்த ஒரே கதையின் இன்னொரு வடிவம்தான் என்றும் கூறிவிடமுடியும்.
இத்தொகுப்பிலுள்ள கட்டுரைகளை ஒருசேர இப்போது படித்தபோது எனக்கு அவை என் கதைகள் இவ்வளவு ஆண்டுகள் சொல்லி வரும் செய்தியைத்தான் வெவ்வேறு தகவல்கள் கொண்டு சொல்வதாகத் தோன்றியது.
இக்கட்டுரைகளை எழுத நேர்ந்தபொழுது ஒரு சில எனக்கு நிர்ப்பந்தமாகக் கூடத் தோன்றியிருக்கின்றன. ஆனால் எழுதி முடித்தபின் இவை அனைத்தும் என் சிந்தனைக்கும் கவனத்திற்கும் நிறைய ஊக்கம் தந்திருக்கின்றன. ஒரு நல்ல கதை எழுதி முடிப்பதில் விளையும் ஊக்கத்துக்கும் உற்சாகத்துக்கும் மனநிறைவுக்கும் இது சற்றும் குறைந்ததல்ல.
- அசோகமித்திரன்
Book Details | |
Book Title | படைப்பாளிகள் உலகம் (Padaipaaligal Ulagam) |
Author | அசோகமித்திரன் (Ashokamitran) |
Publisher | நற்றிணை (Natrinai) |
Pages | 0 |
Year | 2016 |
Edition | 1 |
Format | Paper Back |