-5 %
படைப்பியல்
சி.சு.செல்லப்பா (ஆசிரியர்)
₹143
₹150
- Edition: 01
- Year: 2022
- ISBN: 9789391748807
- Format: Paper Back
- Language: Tamil
- Publisher: எழுத்து பிரசுரம் | Zero Degree Publishing
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
மதக் கொள்கைகள், சமூகக் கொள்கைகள், அரசியல் கொள்கைகள் இத்யாதிகள் போல் இலக்கியக் கொள்கைகள் உண்டு. முன்னவை மூன்றும் மனித வாழ்க்கையோடு சம்பந்தப்பட்ட மத இயல், சமூக இயல், அரசியல் போல, மனிதனால் படைக்கப்படும் இலக்கிய உருவங்களுக்கும் படைப்பியல் உண்டு. அந்தப் படைப்பியல் சம்பந்தமான அடிப்படைக் கொள்கைகளை, அவற்றின் லட்சணங்களை அறிமுகப்படுத்துவதுதான் இந்தச் சிறுநூலின் நோக்கம். பால பாடநூல் என்று சொல்லலாம். ஏனென்றால் இலக்கியத்துறை நியதிகள், லட்சணங்கள் சம்பந்தமான தகவல்கள் சம்பந்தமாக நம் தமிழ் இலக்கிய வாசக நிலை பாலர் வகுப்பு படிப்பு கட்டத்தில்தான் இருக்கிறது. இந்த ஒரு வாக்கியம் போதும் என்று நினைக்கிறேன்.
இந்தச் சிறுநூல் சாமான்ய இலக்கிய வாசகர்களுக்கு எழுதப்பட்டது என்பதை மீண்டும் சொல்லி, இது அவர்களுக்குப் பயன்படக்கூடும் என்று நம்புகிறேன். இந்த நூலை, விமர்சனத் துறைக்கு என்னை இழுத்த ஒத்த வயதுள்ள ஒத்துப் பழகிய க.நா.சுப்ரமணியம் அவர்களுக்கு சமர்ப்பிக்கிறேன்.
- சி.சு. செல்லப்பா.
Book Details | |
Book Title | படைப்பியல் (Padaippiyal) |
Author | சி.சு.செல்லப்பா (Ci.Su.Sellappa) |
Publisher | எழுத்து பிரசுரம் | Zero Degree Publishing (Ezhuthu Pirasuram | Zero Degree Publishing) |
Published On | May 2022 |
Year | 2022 |
Edition | 01 |
Format | Paper Back |
Category | Essay | கட்டுரை, Literature | இலக்கியம், New Arrivals |