பாலியல் கலைக்களஞ்சியம்
டாக்டர்.பி.எம்.மேத்திவ் (ஆசிரியர்)
₹890
- Year: 2011
- ISBN: 9788189359584
- Page: 504
- Format: Hard Bound
- Language: Tamil
- Publisher: காலச்சுவடு பதிப்பகம்
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
இது ஒரு பாலியல் கல்வி நூல்.
கேரளத்தின் உளவியல் அறிஞர்களில் முதன்மையானவரான டாக்டர் பி.எம். மாத்யூ வெல்லூர் எழுதிப் பெரும் வரவேற்பைப் பெற்ற நூல் ‘பாலியல் கலைக்களஞ்சியம்.’ பாலியலை ஒரு கலையாகப் பாவித்துப் பாலியல் அணுகுமுறைகள், பிரச்சினைகள், தவறான எண்ணங்கள் குறித்து இந்நூல் விளக்குகிறது. பிற உயிரினங்களுடன் ஒப்பீடு, இதுவரையிலான ஆய்வுகள், பாலியல் கலை நூல்கள் மற்றும் ஆய்வறிஞர்கள் பற்றிய தகவல்களும் இந்நூலில் அடங்கியுள்ளன. கீழைநாட்டு, மேலை நாட்டுப் பாலியல் கலை நூல்களிலிருந்து எடுக்கப்பட்ட கருத்துகள், பாலியல் சார்ந்த விநோதமான தகவல்கள் மற்றும் புராண, இலக்கிய, சமய நூல்களில் உள்ள கருத்துகள் பொருத்தமான இடங்களில் பயன்படுத்தப்பட்டிருப்பது இந்தக் கலைக்களஞ்சியத்தின் தனிச்சிறப்பு.
ஏறக்குறைய 300 கோட்டுப்படங்கள், ஆணின் பாலியல் குறைபாடுகள், ஓரினச்சேர்க்கை, காலணி தரும் காமம், சுயஇன்பம், துரிதஸ்கலிதம், பாலியல்கலை, பிணத்துடன் உறவு, பெண்ணின் பாலியல் சிரமங்கள் போன்ற 400க்கும் மேற்பட்ட தலைப்புகள் அடங்கிய இந்தக் கலைக்களஞ்சியம் கிரௌன் அளவில், 525க்கும் மேற்பட்ட பக்கங்களுடன் நேர்த்தியாக அச்சிடப்பட்டுள்ளது. பாலியல் குறித்த மிகையான கற்பனைகளைத் தகர்த்து அறிவியல்பூர்வமான தகவல்களைத் தரும் இந்த அரிய கலைக்களஞ்சியம், தமிழில் ஒரு புதுமுயற்சி.
Book Details | |
Book Title | பாலியல் கலைக்களஞ்சியம் (Paliyil Kalaikalanjiyam) |
Author | டாக்டர்.பி.எம்.மேத்திவ் (Dr.P.M.Mathew) |
ISBN | 9788189359584 |
Publisher | காலச்சுவடு பதிப்பகம் (Kalachuvadu Publications) |
Pages | 504 |
Published On | Nov 2005 |
Year | 2011 |
Format | Hard Bound |
Category | Dictionary & Encyclopedia | அகராதி & களஞ்சியம், Sex | பாலியல் - காமம் |