Menu
Your Cart

பறவைகளுக்கு ஊரடங்கு

பறவைகளுக்கு ஊரடங்கு
-5 %
பறவைகளுக்கு ஊரடங்கு
செழியன்.ஜா (ஆசிரியர்)
₹143
₹150
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
எதிர்பாராத சிக்கல்கள் காரணமாக ஆர்டர்கள் அனுப்புவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. ஜனவரி 25ஆம் தேதிக்குள் சீராகிவிடும். இதனால் ஏற்படும் சிரமத்திற்கு மன்னிக்கவும்.
வேடந்தாங்கல், வடூவூர், வேட்டங்குடி, பழவேற்காடு, திருவில்லிபுத்தூர் காப்பிடம் என தமிழகத்தின் பழமையான, முக்கியத்துவம் வாய்ந்த காப்பிடங்களுக்குச் சென்று வந்த அனுபவத்தை படிக்கும் அறிமுக வாசகர்களுக்கு பறவைகள் குறித்த எளிமையான அறிமுகத்தை நூலாசிரியர் கொடுக்கிறார். சென்னையில் கண்டுகளித்த வலசைப் பறவையான சூரைமாறி (Rosy Starling) குறித்த அனுபவமும், அமூர் வல்லூறு குறித்த கட்டுரையும் இத்தொகுப்பின் முக்கிய கட்டுரையாக அமைந்துள்ளது. ஏனெனில், சில ஆண்டுகளுக்கு முன்பு அமூர் வல்லூறு (Amur Falcon) தமிழகத்தின் கூந்தங்குளம் பகுதிக்கு வலசை வந்த போது, நடைபெற்ற கசப்பான சம்பவங்கள் மனதில் நிழலாடிச் செல்கின்றன. அதனடிப்படையில் பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த இத்தகைய அறிமுகக் கட்டுரைகள் மிகவும் அவசியமாகிறது. கடந்த சில ஆண்டுகளாக தமிழகத்தில் ஏற்பட்ட வெள்ளத்தால் பல மாவட்டங்களில் அதிகளவிலான மரங்கள் வேரோடு சாய்ந்தன. வாழ்விடத்தை இழந்த சூரைமாறிகள் சென்னையின் கிண்டிக்கருகில் இருந்த ஒரு ஆல, அரச மரத்தில் ஆயிரக்கணக்கானவை கூடியிருந்த அழகை காணும் வாய்ப்பை நூலாசிரியர் பெற்றுள்ளார். அந்த அனுபவத்தை நூலை படிக்கும் வாசகனுக்கும் கொண்டு சேர்ப்பதில் வெற்றி பெற்றுள்ளார். நத்தைக் குத்தி நாரை இரு வேறு கட்டுரைகளில், வெவ்வேறு தளங்களில் பேசப்பட்டுள்ளது. ஆந்தைகள், தேவாங்கு மட்டுமின்றி அந்திப்பூச்சிகளைத் (Moth) தேடியலைந்த அனுபவத்தோடு, மற்றொரு கட்டுரையில் வண்ணத்துப்பூச்சிகளின் உலகத்தில் பயணித்ததையும் நூலாசிரியர் அழகுடன் அனுபவத்தையும் எளிமையான வடிவத்தில் பதிவு செய்கிறார்.
Book Details
Book Title பறவைகளுக்கு ஊரடங்கு (paravaikaluku-ooradanku)
Author செழியன்.ஜா
Publisher காக்கைக் கூடு பதிப்பகம் (crownest publication)
Year 2021
Edition 1
Format Paper Back
Category Wild Life | காட்டுயிர், Ecology | சூழலியல், Travelogue | பயணக்குறிப்பு, Nature - Environment | இயற்கை - சுற்றுச்சூழல்

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha