Menu
Your Cart

நடைவழிக் குறிப்புகள்

நடைவழிக் குறிப்புகள்
-5 %
நடைவழிக் குறிப்புகள்
சி.மோகன் (ஆசிரியர்)
₹143
₹150
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹40 shipping fee* (Free shipping for orders above ₹500 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.
தமிழ்ச் சமூகத்தில் பிறந்தோ, வாழ்ந்தோ தம் காலத்துக்கும் வாழ்வுக்கும் சமூகம், அரசியல், கலை, இலக்கியம், கலாசாரம், சிந்தனை ஆகிய தளங்களில் வளமான பங்களிப்புகள் செய்தும் உரிய கவனிப்பைப் பெறாது போய்விட்ட சில இலட்சிய மனங்கள் பற்றிய கட்டுரைகள் இவை. தங்கள் துறை சார்ந்த பணிகளுக்குத் தம் வாழ்வை முழு முற்றாக ஒப்புக்கொடுத்து, அயராது பணியாற்றி, அத்துறைகளை வளப்படுத்திய ஆளுமையாளர்கள் இவர்கள். இவர்களுடைய அர்ப்பணிப்பு, உத்வேகம், உழைப்பு ஆகியவற்றின் அருமையை நாம் உணர்ந்து போற்ற வேண்டும்; சுவீகரிக்க வேண்டும். பொதுவாக, எந்தவொரு வகையான வரலாற்றுப் பதிவிலும் நாம் சீரிய முயற்சிகள் கொண்டிருக்கவில்லை. இது குறித்து அசட்டையான மனோபாவமே கொண்டிருக்கிறோம். மிகச் சமீபத்தில் வாழ்ந்து மறைந்த முக்கியமான ஆளுமையாளர் பற்றிக்கூட, ஓர் அறிமுகப்படுத்தலுக்குத் தேவையான அளவுகூட, தகவல்கள் சேகரிப்பது சிரமம். இச்சிரமத்தை எதிர்கொண்டு எழுதப்பட்ட கட்டுரைகள் இவை. இன்னொன்றும் குறிப்பிட வேண்டும். 1996 - 1997ஆம் ஆண்டுகளில் ‘நடைவழிக் குறிப்புகள்’ புதிய பார்வை இதழில் தொடராக வெளிவந்தது. இத்தொடரின் மூலமாகத் தமிழின் மிக முக்கியமான படைப்பாளுமைகளான ஜி. நாகராஜன், ப. சிங்காரம், எஸ். சம்பத் ஆகியோரின் புகைப்படம் முதல் முறையாக அச்சேறியது. மிகச் சாதாரண விஷயமிது. ஆனால் இந்த சாதாரணம் நிகழ எவ்வளவு காலமாகி இருக்கிறது. நம்மைப் பீடித்திருக்கும் அசட்டையான மனோபாவத்தைச் சுட்டுவதற்காகத்தான் இது குறிப்பிடப்படுகிறதே தவிர வேறில்லை. என்னுடைய புத்தகங்களில் மிகுந்த கவனிப்பும் வரவேற்பும் பெற்றது ‘நடைவழிக் குறிப்புகள்’. இதன் கருத்தாக்கத்தைப் பலரும் சிலாகித்திருந்தனர். ‘இந்தியா டுடே’யில் ராஜ்கௌதமனும், ‘தினமணி’யில் ராஜமார்த்தாண்டனும், ‘நவீன விருட்ச’த்தில் வெங்கட் சாமிநாதனும் இம்முயற்சியைப் பாராட்டி எழுதியிருந்தது இப்போது நினைவுக்கு வருகிறது. கல்லூரிகளில் பாடமாக வைக்கப்பட வேண்டுமெனவும், தமிழ் மாணவ சமூகம் அவசியம் படிக்க வேண்டிய புத்தகமெனவும் அவர்கள் வலியுறுத்தியிருந்தனர்.
Book Details
Book Title நடைவழிக் குறிப்புகள் (Nadaivazhi Kurippugal)
Author சி.மோகன் (C. Mohan)
Publisher இதர வெளியீடுகள் (Other Publishers)
Pages 144
Year 2019
Category Essay | கட்டுரை, Literature | இலக்கியம்

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha

By the same Author

பியானோ (சிறுகதைகள்) - சி.மோகன்:..
₹171 ₹180
மங்கோலிய மேய்ச்சல்நில நாடோடி மக்களின் மகத்தான நாகரிகம், நவீனத்துவத்தின் வன்முறைத் தாக்குதல்களால் மறைந்துபோன அவலம் பற்றிய நாவல் ‘ஓநாய் குலச்சின்னம்’. ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக உயிர் கொண்டிருந்த மேய்ச்சல் நிலம் என்ற பெரிய உயிர் சில ஆண்டுகளுக்குள்ளாகப் படுகொலை செய்யப்பட்ட வரலாற்று நிகழ்வின் புனைவு. ..
₹618 ₹650
ஓர் அதீதப் புனைவுப் பயணத்துக்கான புதிர்ப் பாதைகள் இத்தொகுப்பில் விரிந்து கிடக்கிறன. ஜூலியோ கொர்த்தஸார், மிலன் குந்தேரா, யசுனாரி கவபத்தா, பூபென் கக்கர், ஸிந்தியா ஓசிக் ஆகிய மகத்தான படைப்புகளின் பிரமிப்பூட்டும் புனைவு வெளிகளில் நிகழும் இந்த அபூர்வமான பயணத்தில் மனித இயல்பின் இருண்ட பகுதிகளில் ஒளி பாய்க..
₹190 ₹200