Menu
Your Cart

பட்டாம்பூச்சி | Papillon

பட்டாம்பூச்சி | Papillon
-5 %
பட்டாம்பூச்சி | Papillon
₹399
₹420
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
பட்டாம்பூச்சியின் மற்றொரு பெயர்: சுதந்திர தாகம். மார்பிலே ஒரு பெரிய பட்டாம்பூச்சியின் படத்தைப் பச்சைக்குத்திக் கொண்டிருந்ததால் அதையே பெயராகப் பெற்றவன் ஃபிரெஞ்சுக்காரனான ஹென்றி ஷாரியர். உலக இலக்கியத்தின் தலைசிறந்த விடுதலைக் காவியங்களில் ஒன்று. மனிதனின் தாக்குபிடிக்கும் ஆற்றலுக்கும், விடாமுயற்சிக்கும் சுதந்திர தாகத்திற்கும் ஒரு மகோன்னதமான வாழும் எடுத்துக்காட்டு! பிரான்ஸ் நாட்டை சேர்ந்த ஹென்றி ஷரியர் என்ற கொலைக் குற்றவாளி ஆயுல் தண்டனை விதிக்கப்பட்டு தீவாந்தர சிறையில் தேடி அடைக்கப்படுகிறான். சிறை கொடுமை காரணமாக சுதந்திர வாழ்வை தேடி பல சிறைகளில் இருந்து தப்பி ஓடும் பரபரப்பான சம்பவங்களை அவன் புத்தகமாக எழுதினான். பட்டாம் பூச்சி என்ற பட்டப் பெயர் பெற்ற அவனது சரிதத்தை ரா. கி. ரங்கராஜன் எளிய தமிழில் மொழிமாற்றம் செய்து இருக்கிறார். மூலக் கதையில் உள்ள திகிலூயிட்டும் சம்பவங்கள் அனைத்தையும் அதே உணர்ச்சிப் பெருக்குடன் தந்து இருப்பதால் 855 பக்கங்களைக் கொண்ட எந்த நூலை ஒரே மூச்சில் படிக்க முடிகிறது. சிறைப்பட்ட மனிதனின் தணிக்க முடியாத சுதந்திர வேட்கையும் அவனது மனத் திண்மையும் ஒருவொரு பக்கத்திலும் வெளிப்பட்டு இருக்கிறது. ஹென்றி ஷாரியர் என்னும் பிரெஞ்சு சிறை கைதியால் பாப்பிலான் (Papillon) என்ற பெயரில் பிரெஞ்சு மொழியில் 1969 இல் வெளிவந்த இந்த சுயசரிதை புத்தகம் பின்னர் ஆங்கிலத்தில் ஜூன்.பி.வில்சன் & வால்டேர் பி. மைக்கேல் என்பவர்களால் 1970 இல் மொழிபெயர்க்கப்பட்டு விற்பனை உலகில் சக்கை போடு போட்டது. ரா. கி. ரங்கராஜன் அவர்களால் தமிழில் மொழி பெயர்க்கப்பட்டு "பட்டாம்பூச்சி" குமுதத்தில் தொடராகவும் வெளியாகி வந்தது நூலாக வந்துள்ளது. சுமார் 800 பக்கங்களை கொண்ட இந்த புத்தகம் சுதந்திர வேட்கையும், வீரமும் நிறைந்த மனிதனது வரலாறு. பட்டாம்பூச்சி படும் கஷ்டங்களும், அவனது தீராத சுதந்திர வேட்கையும், நண்பர்களிடையே அவனுக்குள்ள மிகுந்த செல்வாக்கும், துன்பங்களை அவன் எதிர் கொண்டு வெற்றி கொள்ளும் அவன் மன துணிவும், யார்க்கும் பணியாத அதே சமயம் யாரையும் பகைத்து கொள்ளாத அவன் சாமர்த்தியமும் நம்மை வியக்க வைக்கிறது. மொத்தத்தில் இந்த நூல் காதல், வீரம், சுதந்திரம், தத்துவம் போன்ற பலவற்றை உள்ளடக்கிய மிக சிறந்த காவியம். எத்தனை முறை படித்தாலும் சலிக்காது. தமிழிலிலும் மலையாளத்திலும் வந்த 'சிறைச்சாலை' படம் இந்நாவலின் தாக்கத்திற்கு உட்பட்டது. 'Papillon' என்ற திரைப்படமும் இந்நாவலில் இருந்து உருவாக்கப்படது.
Book Details
Book Title பட்டாம்பூச்சி | Papillon (Pattam Poochi | Papillon)
Author Henri Charriere | ஹென்றி ஷாரியர்
Translator ரா.கி.ரங்கராஜன் (Ra.Ki.Rangarajan)
Publisher நர்மதா பதிப்பகம் (Narmadha Padhipagam)
Pages 856
Year 2012
Edition 16
Category Novel | நாவல், Translation | மொழிபெயர்ப்பு, Classics | கிளாசிக்ஸ், Crime - Thriller | க்ரைம் - த்ரில்லர்

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha

By the same Author

நீங்களும் முதல்வராகலாம்ரா.கி.ர பல மைல்கல்களைத் தொட்ட எழுத்தாளர். மொழிபெயர்ப்பு நூல் எழுதும்போது மிக கவனமாக , அதன் உண்மையான சுவை குறையாமல் ,அதே சமயம் எழுதப்படும் மொழியில் படிப்பவர்க்கு அன்னியமாக தோன்றாமல் எழுதும் கலை அவருக்கு விரல் நுனியில். அதை இந்த நூலிலும் கையாண்டு நூலின் தரத்தை உயர்த்தியுள்ளார்..
₹428 ₹450
“A modern classic of courage and excitement.” —The New Yorker NOW A MAJOR MOTION PICTURE STARRING CHARLIE HUNNAM AND RAMI MALEK Henri Charriere, nicknamed "Papillon," for the butterfly tattoo on his chest, was convicted in Paris in 1931 of a murder he did not commit. Sentenced to life imprisonment..
₹380 ₹400