Menu
Your Cart

இந்திய நேரம் 2 A.M.

இந்திய நேரம் 2 A.M.
-5 %
இந்திய நேரம் 2 A.M.
₹119
₹125
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹40 shipping fee* (Free shipping for orders above ₹500 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.
பட்டுக்கோட்டை பிரபாகர், மற்ற எழுத்தாளர்கள் பொறாமைக் கொள்ளும் அளவுக்கு இளமை மிகுந்த தோற்றத்திற்கு சொந்தக்காரர். அவரது தோற்றத்தில் நீடித்திருக்கும் இளமை, அவரது எழுத்துகளிலும் நீடித்திருப்பதே பட்டுக்கோட்டை பிரபாகரின் வெற்றிக்கு காரணம். 1980களில் பட்டுக்கோட்டை பிரபாகரின் தலையாரி தெரு, பட்டுக்கோட்டை என்ற முகவரி வாசகர்களுக்கு மனப்பாடம். ஆனந்தவிகடனில் தொடராக வெளிவந்த அவருடைய “தொட்டால் தொடரும்”, “கனவுகள் இலவசம்" ஆகிய கதைகள் இன்றும் வாசகர்களால் விரும்பிப் படிக்கப்படுபவை. அன்றிலிருந்து இன்று வரையிலும் தனது துள்ளலான நடை மற்றும் வசீகரமான கதை சொல்லும் முறையால் அடுத்தடுத்த தலைமுறை வாசகர்களையும் வென்று நூற்றுக்கணக்கான சிறுகதைகள், நாவல்கள், தொடர்கதைகள், தொலைக்காட்சித் தொடர்கள், திரைப்படங்கள் என்று எழுத்தின் அத்தனைத் தளங்களிலும் தனது முத்திரையைத் தொடர்ந்து பதித்து வரும் பட்டுக்கோட்டை பிரபாகரின் புகழ்பெற்ற நாவல்களுள் ஒன்று இந்திய நேரம் 2.A.M. 1986 இல் முத்தாரம் இதழில் தொடராக வந்தது. இதிகாசங்கள் தொடங்கி, சமகால நிகழ்வகள்வரை சமூகத்தில் முக்கியமான பொறுப்பில் இருப்பவர்கள், பிரபலங்கள் தொடங்கி சாமானியர்கள்வரை அந்த ஒரு நொடி சபளத்திற்காக தங்கள் மொத்த வாழ்க்கையின் கடின உழைப்பால் சம்பாதித்த நன்மதிப்பை பணயம் வைக்கத் துணிவது ஏன்? அதுபோன்ற சமயங்களில் அவர்களின் எண்ண ஓட்டம் எப்படியிருக்கும்? என்பதைத் துல்லியமாகக் காட்சிப்படுத்தியிருக்கிறார் பட்டுக்கோட்டை பிரபாகர். பணம், பதவி, பகட்டு ஒரு தொழிலதிபரை எப்படி சபலம் என்ற சேற்றில் வழுக்கவைத்தது, அதற்கு அவர் கொடுத்த விலை என்ன என்பதை விறுவிறுப்பான கற்பனைக் கதையாக மகேந்திரன் என்ற கதாப்பாத்திரத்தின் மூலம் கச்சிதமான தீட்டியிருக்கிறார்.
Book Details
Book Title இந்திய நேரம் 2 A.M. (Indhiya Neram 2 A M)
Author பட்டுக்கோட்டை பிரபாகர் (Pattukottai Prabhakar)
ISBN 9789382578802
Publisher சிக்ஸ்த்சென்ஸ் (Sixthsense Publications)
Pages 168
Year 2015
Category Novel | நாவல், Crime - Thriller | க்ரைம் - த்ரில்லர்

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha

By the same Author

அலமாரியில், பீரோவில், மேசை இழுப்பறையில் ஏதோ ஒன்றைத் தேடினால் நம் கண்ணில்படுவது பழைய கடிதங்களாக இருக்கும்! தாத்தா பேரனுக்கு... அம்மா மகனுக்கு... மகள் அப்பாவுக்கு... மனைவி கணவனுக்கு... அண்ணன் தங்கைக்கு... என ஆண்டாண்டு காலமாக எழுதப்பட்ட கடிதங்களைப் படிக்க ஆரம்பித்தால், எழுதியவரின் முகம் பல உணர்வுகளோடு ..
₹95 ₹100
மேக்கப் புன்னகைநடிகைகள்... நமது கனவுகளை நிரப்பும் தேவதைகள். ஆனால், அவர்கள் மேக்கப் தேவதைகள், அந்த மேக்கப்பிற்கு பின்னால் மறைந்திருக்கும் வலியும், கண்ணீரும், ஏக்கங்களும், தவிப்புகளும் நமது கண்ணுக்குத் தெரிவதே இல்லை. கவிதை எழுதும், திருமணம் செய்துகொண்ட வாழ ஆசைப்படும் ஒரு நடிகை எதிர்கொள்ளும் போராட்டங்க..
₹119 ₹125
கடவுள் கனவில் வந்தாரா?பட்டுக்கோட்டை பிரபாகர் போன்றவர்கள் இந்த மாறும் உலகிலும் தங்கள் சிறுகதைத் திறமையை விட்டுவிடாமல் எழுதிக் கொண்டிருப்பது எப்போதாவது சக்கரம் திரும்பி மீண்டும் சிறுகதைகளுக்கு மவுசு வரும் என்ற நம்பிக்கையில் இருக்கலாம். யதார்த்தமான பாத்திரப் படைப்புகளை தெளிவான, ஆரவாரமில்லாத நடையில் தந்..
₹209 ₹220