Menu
Your Cart

பவித்ரஞானேச்வரி

பவித்ரஞானேச்வரி
-5 % Out Of Stock
பவித்ரஞானேச்வரி
சிவஹரி அம்பாமயி (ஆசிரியர்)
₹238
₹250
+ ₹40 shipping fee* (Free shipping for orders above ₹500 within India)
Out of Stock
புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.
ஸ்ரீமத் பகவத்கீதைக்கு எழுதப்பட்ட உரைகளில் முக்கியமானது மராத்தி மொழியின் - பவித்ரஞானேச்வரி பழகு தமிழில் பகவத் கீதைக்கு பவித்ரமான ஓர் உரை! முதல் பாகம் ( அத்தியாயம் 1 முதல் 9 வரை ) மட்டும் வெளிவந்து உள்ளது. ’பவித்ரஞானேச்வரி’ என்னும் பெயருடைய ‘ஸ்ரீமத் பகவத் கீதையின் தமிழ் மொழிபெயர்ப்பு - அமரரான - யச்வன்த் கோபாள ஜோசி என்பவரின் மராட்டிய மொழியில் எழுதி - முதன் முதலாக 1892 - ஆம் வருஷம் வெளியான முதல் பதிப்பின் ‘பிரதி’யே ஆகும். இந்த ‘ஞானேச்வரிக்கு’ யச்வன்த் கோபாள் ஜோசி கொடுத்திருந்த பெயர் ‘ஸீபோத ஞானேச்வரி’ என்பதாகும். இதை அவர் எப்பொழுது எழுதி முடித்தார் என்ற விவரம் தெரியவில்லை. ஆனால் இந்த்ப் புத்தகத்தை எழுதி முடித்தார் என்ற வெளியிடும் தெரியவில்லை. ஆனால் இந்தப் புத்தகத்தை 1886-ஆம் வருஷமே வெளியிடும் உத்தேசம் இருந்தது என்பது வரை தெரிகிறது. ஆகையால் இது 1886-ஆம் வருஷம் எழுதியிருக்கலாம். என்றால் - இப்பொழுது 2013 - நடப்பதால், கிட்டதட்ட 133 வருஷங்களுக்கும் முன்னால் எழுதியிருக்கலாம் என்று சொல்ல இடமிருக்கிற்து. ’ஸீபோத ஞானேச்வரி’யை எழுதியவர் பெயர் - யச்வன்த் கோபாள் ஜோஷி, முதன் முதலாக இதை வெளியிடும் உத்தேசம் அவருடைய மகனான - யச்வன்த் மனோகர் ஜோஷிக்குத் தோன்றி 1886-லேயே அதற்காக ஒரு முன்னுரையையும் அவர் தயாரித்து வைத்திருந்ததாகத் தெரிகிறது. ஆனால் ஏதோ சில காரணங்களால் அது தடைப்பட்டு 1892-ஆம் வருஷம் தான் இதன் முதல் பதிப்பு வெளிவந்தது. அதற்கே கூட இன்று 120 வருஷங்கள் ஆகின்றன. ’யச்வன்த் கோபாள் ஜோசி காலமான பிறகே அவருடைய மகனால் இப்புத்தகம் வெளியிடப்பட்டது என்பதும் குறிப்பிடப்பட்ட வேண்டிய விஷயம். இது வெளிவருவதற்கு முன்னால் ‘ஸார்த்த ஞானேச்வரி’ என்ற பெயரில் ஒரு புத்தகம் இருந்தது என்றும் தெரிய வருகிறது. " எல்லாவற்றிற்கும் மேலாக இந்தக் கிடைப்பதற்கரிய ரத்தினம் போன்ற இந்த ‘ஸீபோதஞானேச்வரி’யைத் தமிழில் மொழிபெயர்கக அரசரான கை யச்வன்த் கோபால் ஜோசியினுடையதும் அவரது மகனான யச்வன்த் மனோகர் ஜோஷியுடைதும் அனுமதியை நேரில் பெற முடியாத ஒரே காரணத்திற்காக, இதை அப்படியே மறைந்து போக வேண்டும் என்று எனக்குத் தோன்றவில்லை. ஆகையால் என் மனச் சாஷிக்கும் ஸ்ரீ கிருஷ்ண பகவானுடைய நேரான கிருபைக்கும் உட்பட்டு இதைத் தமிழில் மொழிபெயர்த்து விட வேண்டும் என்று செயலிலும் இறங்கி விட்டேன்.
Book Details
Book Title பவித்ரஞானேச்வரி (Pavithra Gnaneshwari)
Author சிவஹரி அம்பாமயி (Sivahari Ampaamayi)
Publisher நர்மதா பதிப்பகம் (Narmadha Padhipagam)
Pages 336

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha

By the same Author