Menu
Your Cart

பயணக் கதை

பயணக் கதை
-5 %
பயணக் கதை
₹456
₹480
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
சமகாலத் தமிழ் எழுத்தாளர்களில் மிகத் தேர்ந்த கதை சொல்லி யுவன் சந்திரசேகர். அதிதீவிரமான படைப்பும் சுவாரசியமாக எழுதப்பட முடியும் என்பதற்கு எடுத்துக்காட்டு அவரது புனைகதைகள். யுவன் சந்திரசேகரின் ஆறாவது நாவலான ‘பயணக் கதை’ அவருடைய நாவல்களிலேயே உச்சபட்ச வாசிப்பு சுகத்தை உள்ளடக்கியிருக்கிறது. மூன்று நண்பர்கள் மேற்கொள்ளும் பயத்தின் கதையாகத் தொடங்கும் நாவல் மூவரும் சொல்லும் தனித்தனிக் கதைகளின் பயணங்களாக வாசக மனதில் விரிகிறது. மூன்று பயணக் கதைகளும் சந்திக்கும் புள்ளியில் அவை ஒரே கதையாகவும் குவிகின்றன. கிருஷ்ணன் சொல்லும் கதையும் இஸ்மாயில் சொல்லும் கதையும் சுகவனம் சொல்லும் கதையும் மூன்றாக இருந்தாலும் ஒன்றுக்கொன்று பின்னப்பட்டவை. ஒருவர் சொல்லும் கதையிலிருந்து கிளை பிரியும் இன்னொரு கதை, அதிலிருந்து விலகிச் செல்லும் மற்றொரு கதை, வேறொரு கதையிலிருந்து இன்னொரு கதைக்குள் வந்து சேரும் பிறிதொரு கதை என்று விரியும் நாவல் காலத்தைப் பகுக்கிறது. களங்களைப் புதிது புதிதாக உருவாக்குகிறது.
Book Details
Book Title பயணக் கதை (Payana Kathai)
Author யுவன் சந்திரசேகர் (Yuvan Chandrasekar)
ISBN 9789380240855
Publisher காலச்சுவடு பதிப்பகம் (Kalachuvadu Publications)
Pages 388
Published On Nov 2010
Year 2011
Edition 1
Format Paper Back
Category Novel | நாவல்

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha

By the same Author

பெர் பெதர்சன் கதை சொல்லும் பாணி வித்தியாசமானது. உணர்ச்சி மிகாத மொழியில், நடந்தவை அனைத்தையும் மறு பரிசீலனை செய்கிற தொனியில், அன்று நடந்தவற்றின் மீது இன்றுவரை நீங்காதிருக்கும் ஆச்சரியம் மிகுந்த குரலில் சொல்லிக்கொண்டே போகிறார். ஊழின் மாயக் கரங்கள் செயல்படுவதை; தற்செயலின் சாயல் கொண்ட, ஆனால் துல்..
₹309 ₹325
இந்நாவலின் மையம் இசை. இசை, நெருங்கும்போது விலகி விரியும். அகழ்ந்து இறங்கும்போது ஆழ்ந்து செல்லும். இசையில் விரிவையும் ஆழத்தையும் தனது சுயமாக்கிக்கொண்டு வெற்றிபெற்ற கலைஞனின் கதை ‘நினைவுதிர் காலம்’. ஒருவகையில் யுவன் சந்திரசேகர் இசையை மையமாகக்கொண்டு இதற்கு முன்னர் எழுதிய ‘கானல் நதி’ நாவலின் தொடர்ச்..
₹333 ₹350
தமிழில் இன்று எழுதிவரும் எழுத்தாளர்களில் ஆகப் பெரிய கதை சொல்லி யுவன் சந்திரசேகர்தான். அதி நவீனக் கதைசொல்லி. அவருடைய கதைகளை என்னால் ஒருபோதும் சொற்களாக வாசிக்க முடிந்ததில்லை. ஒலியலகுகளாகவே வாசிக்கிறேன். கண்களால் புரட்டிச் செல்லும்போதும் அந்தப் பிரதி காதுகளால் கிரகிக்கப்பட்டுப் புரிந்துகொள்ளப்படு..
₹276 ₹290
தமிழின் முக்கியமான நவீன கவிஞர்களில் ஒருவரான எம். யுவனின் முதல் சிறுகதைத் தொகுப்பு. இந்திய மரபிலிருந்து விரியும் புனைகளன்களை நவீன மனிதனின் தரிசனங்களோடு இணைக்கும் யுவன் சந்திரசேகர் ஒவ்வொரு கதைக்குள்ளும் சிதறிக்கிடக்கும் பல்வேறு கதைகளைத் திறக்க முற்படுகிறார்...
₹266 ₹280