-5 %
Out Of Stock
மரபியல்
ம.செந்தமிழன் (ஆசிரியர்)
₹152
₹160
- Edition: 1
- Year: 2020
- Page: 160
- Format: Paper Back
- Language: Tamil
- Publisher: செம்மை வெளியீட்டகம்
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
Out of Stock
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
தொல்காப்பியர் வழங்கிய தொல்காப்பியத்தின் மரபியல் செய்யுள்கட்கு ஆசான் ம.செந்தமிழன் உணர்ந்து இயற்றிய விரிவுரை - மரபியல் விரிநூல்.
தமிழின் தொன்மையான நூல்களில் இன்றியமையாததும், 7000 ஆண்டுகளுக்கு முந்தையதுமானது தொல்காப்பியம்.
>>தமிழ் சமூகத்தின் நடைமுறைகள் மற்றும் முன்னோர் உணர்ந்து கூறிய கருத்துகள் ஆகியவற்றைத் தொகுத்துக் காக்கும் பெட்டகம் தொல்காப்பியம்.
>>தொல்காப்பியம் கூறும் இலக்கணங்களும் கருத்துகளும் இன்றும் சமூக நடைமுறைகளாகவும் மொழி வழக்கமாகவும் தமிழ் கூறும் நல்லுலகத்திற்கு வழிகாட்டும் இறை ஒளி.
>>இது தமிழ்ச் சமூகத்தை அறிவார்ந்த சமூகமாக, அறமார்ந்த சமூகமாக காலத்திற்கும் நிலைபெறச்செய்யும் மெய்யியல் மறை நூல்.
இப்பெருமை வாய்ந்த தொல்காப்பியம், பிற்காலத்தில் தமிழ் மொழிக்கான இலக்கண நூலாகவும் சமயம் சார்ந்த நூலாகவும் மட்டுமே பிழையாக அறியப்பட்டு வந்தது.
>>பிற்காலத்தில் தொல்காப்பியத்திற்கு எழுதப்பட்ட உரைகள், இந்நூலில் உள்ள மெய்மைகளைப் புறந்தள்ளி, கருத்துத் திரிபுகளை ஏற்றின. இதனால், தொல்காப்பியம் தமிழர்களுக்கு எட்டாக் கனியாகியது.
>>எப்போதெல்லாம் மெய்மைக்கு நெருக்கடி ஏற்படுகிறதோ, அப்போதெல்லாம் தமிழ்ச் சமூகமும், மெய்யியலாளர்களும் எழுச்சி கொண்டு மீட்புப்பணிகளையும் காப்புப் பணிகளையும் செய்திருக்கிறார்கள்.
>>“வடவேங்கடந் தென்குமரி ஆயிடைத் தமிழ்கூறும் நல்லுலகத்து” எனும் தொல்காப்பியப் பாயிரத்தின் வரிகளும், அவற்றுக்கு ஆசானின் விளக்கமும் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே இந்நிலம் முழுதும் பரவிவாழ்ந்த தமிழ்ச் சமுகத்தின் பெருமையை எடுத்துரைக்கின்றன.
தமிழ்ச் சமூகத்தின் இன்றைய சுருங்கிய நிலப்பரப்பு, இழந்த மரபு, மறுக்கப்படும் மாண்பு போன்ற தற்கால நெருக்கடிகள், வாசிப்போரின் மனக்கண்ணில் விரிவதைத் தவிர்க்க இயலாது.
Book Details | |
Book Title | மரபியல் (Marabiyal) |
Author | ம.செந்தமிழன் (Ma.Sendhamizhan) |
Publisher | செம்மை வெளியீட்டகம் (Semmai Publication) |
Pages | 160 |
Published On | Jan 2020 |
Year | 2020 |
Edition | 1 |
Format | Paper Back |
Category | Ancient literature | பழங்கால இலக்கியங்கள் , Essay | கட்டுரை, 2022 New Arrivals | 2022 புதிய வெளியீடுகள் |