Menu
Your Cart

பேச்சில்லாக் கிராமம்

பேச்சில்லாக் கிராமம்
-5 %
பேச்சில்லாக் கிராமம்
ம.பெ.சீனிவாசன் (ஆசிரியர்)
₹204
₹215
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
பேச்சில்லாக் கிராமம் என்பது முதல் ஏனாதிகிராமம் என்பது முடிய ஐம்பது கட்டுரைகள் அடங்கிய நூல் இது.பெரும்பாலும் கிராமத்தைப் பேசு பொருளாகக் கொண்டவை. ஐந்து மணித்துளி வாசிப்புக்குள் அடங்கும் அளவிற்சிறிய கட்டுரைகள்... கிராம வாழ்க்கையைக் கண்முன் நிறுத்தும் சொல்லாடல்கள், காட்சிப்படமாய் விரியும் மரபுத்தொடர்கள், சொலவடைகள் மற்றும் பழமொழிகள், இடத்திற்கேற்ப இட்டுக்கட்டிச் சொன்ன வாய்மொழிக் கதைகள், பொருள் செறிவுடன் காரணத்தை உள்ளடக்கிய ஊர்ப்பெயர்கள், கிராமத்து எளியமக்கள் நமக்கு ஆக்கிக் கொடுத்த அரியசொற் செல்வங்கள், வெள்ளந்தியான அவர்களின் பேச்சு மொழிகள், எழுத்து இலக்கியத்துக்கு உணர்ச்சியும் உயிரும் கொடுக்கும் நாட்டார் பாடல்கள் ஆகியவற்றை விளக்கிப்பேசும் கட்டுரைகள் இதில் நிறைய உண்டு. நவீன வாழ்க்கையில் மெல்ல மெல்ல முகமாறிக் கொண்டிருக்கும் நமது கிராமங்களின் பழைய முகச்சாயலைச்சில கட்டுரைகள் நினைவூட்டக் கூடும். எனவே ‘பாமரர்பின் சென்ற பைந்தமிழ்’ பற்றிப்பேசும் நூல் இது.
Book Details
Book Title பேச்சில்லாக் கிராமம் (Pechchillaa Graamam)
Author ம.பெ.சீனிவாசன் (Ma.Pe.Seenivaasan)
Publisher சந்தியா பதிப்பகம் (santhiya pathipagam)
Year 2021
Edition 1
Format Paper Back
Category Essay | கட்டுரை

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha

By the same Author

வைணவத்தை ஒரு பொதுஜன இயக்கமாக மாற்றிய முதல் சமயத் தலைவர் இராமாநுசர். வைணவம் ஒரு வாழும் சமயமாக, பிரபல இயக்கமாக அவர் காலத்தில் மாறியது. ‘திருமாலைப் பரம்பொருளாகக் கருதிச் சரணடைய விரும்பியவர்கள் அனைவரும் வைணவர்கள்;அவர்களுக்குள் சாதி வேற்றுமை இல்லை’ என்று கருதியவர் இராமாநுசர். இதனை வெறும் உபதேசமாக்காமல், ..
₹143 ₹150