-10 %
பேய் கதைகளும் தேவதை கதைகளும்
ஜெயமோகன் (ஆசிரியர்)
₹225
₹250
- Edition: 1
- Year: 2023
- ISBN: 9789392379550
- Format: Paper Back
- Language: Tamil
- Publisher: விஷ்ணுபுரம் பதிப்பகம்
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
உலக அளவில் சொல்லப்படும், எழுதப்படும் கதைகளில் கணிசமானவை பேய், பிசாசு, தேவதைக் கதைகளே ஆகும். வாழ்க்கையின் புதிர்களை வாழ்க்கைக்குள் வைத்து விளங்கிக் கொள்ள இயலாது போகும்போது அவற்றை வாழ்க்கைக்கு அப்பால் கொண்டு சென்று விளங்கிக்கொள்ள முயன்ற தொல்மனத்தின் முயற்சிகள் இவை. உலக இலக்கியத்தின் பெரும் படைப்பாளிகள் பலரும் பேய்க் கதைகளை எழுதியுள்ளனர்.எப்போதுமே மனித மனங்களின் உச்சங்களை அறிவதில் ஆர்வம் கொண்டவன், எழுத முனைபவன் என்ற வகையில் நான் ஏற்கெனவே தொடர்ந்து பேய்க் கதைகளை எழுதி வந்துள்ளேன். அவற்றின் உளநுட்பங்களும் கவித்துவ ஆழங்களும் என் வாசகர்களால் பெரிதும் உணரப்பட்டும் உள்ளன.வாழ்க்கையைக் கற்பனை மூலம் அறிய முயல்பவர்கள் தினம் தினம் காணும் பேய்கள் பல. அவனுள் குடிகொண்டுள்ள பேய்களோ பற்பல. இத்தொகுப்பில், முற்றிலும் அப்படிப்பட்ட கதைகளால் ஆன ஓர் உலகை உருவாக்கியுள்ளேன். குற்றம், பாவ உணர்ச்சி, தனிமை ஆகியவற்றின் வெளிப்பாடுகளாகவே இக்கதைகளைக் காண்கிறேன்.
Book Details | |
Book Title | பேய் கதைகளும் தேவதை கதைகளும் (pei kadhaigalum devathai kadhaigalum) |
Author | ஜெயமோகன் (Jeyamohan) |
Publisher | விஷ்ணுபுரம் பதிப்பகம் (Vishnupuram Publication) |
Year | 2023 |
Edition | 1 |
Format | Paper Back |
Category | Short Stories | சிறுகதைகள், 2023 New Arrivals |