- Edition: 1
- Year: 2016
- Page: 295
- Format: Paper Back
- Language: Tamil
- Publisher: நீர்
பெரியார் வாழ்க்கை வரலாறு
இவ்வாறு, மதம், சமூகம், அரசியல் ஆகிய மூன்றிலும் பெரியார் ஒரு புரட்சிக்காரராக விளங்குகிறார். பெரியார் ஒரு மதவாதியாக இருந்து பின்னர் மதப்புரட்சிக்காரராக மாறவில்லை. ஒரு சமூக வாதியாக இருந்து பின்னர் சமூகப் புரட்சிக்காரராக மாறவில்லை. ஒரு முதலாளித்துவ வாதியாக இருந்து பின்னர் சமதர்ம வாதியாக மாறவில்லை. பிறப்பிலேயே மதப் புரட்சிக்காரராகப் பிறந்தார்; சமூகப் புரட்சிக்காரராகப் பிறந்தார்; சமதர்ம வாதியாகப் பிறந்தார்.
இளமை முதல் இன்றுவரை இவர் கொள்கையில் மாறுதல் இல்லை. விளையாட்டுப் பருவத்தில் இவரிடம் இயற்கையில் அமைந்திருந்த குணங்களே பிற்காலத்தில் இவருடைய கொள்கையாக மாறின; சொற்பெருக்குகளாக வழிந்தன; ஒரு இயக்கமாக உருப்பட்டன. தன் கொள்கையை விட்டுக் கொடுக்கும் மனப்பான்மை இவரிடம் எப்பொழுதும் இருந்ததில்லை. தன் கொள்கைக்குப் பிறர் இணங்கி வரவேண்டும்; பிறர் கொள்கைக்கு இவர் இணங்கவேமாட்டார். ஒரு சீர்திருத்த வாதிக்கு இருக்கவேண்டிய குணம் இதுவே. புத்தர், சாக்ரடீஸ், கன்ஃபூஷியஸ், ஏசுகிறிஸ்து, முகம்மதுநபி போன்ற பெரியார்கள் தங்கள் கொள்கைகளில் வெற்றி பெற்றதற்குக் காரணம் இதுவே. அவர்கள் பகைவர்களால் பல துன்பங்களுக்கு ஆளாகியும் தங்கள் கொள்கைகளில் எள்ளளவும் விட்டுக்கொடுக்காத உறுதியுடையவர்களாயிருந்தனர். இன்றைய சீர்திருத்த வாதிகளில் இத்தகைய உறுதியுடையவர் பெரியார் ஒருவரே. ஆதலால் இவர் உலகப் பெரியாராவர்.
Book Details | |
Book Title | பெரியார் வாழ்க்கை வரலாறு (periyar vazhkai varalaru) |
Author | சாமி.சிதம்பரனார் (Saami.Sidhamparanaar) |
Publisher | நீர் (water) |
Pages | 295 |
Year | 2016 |
Edition | 1 |
Format | Paper Back |