Menu
Your Cart

பெரியாரின் நண்பர்: டாக்டர் வரதராஜூலு நாயுடு வரலாறு

பெரியாரின் நண்பர்: டாக்டர் வரதராஜூலு நாயுடு வரலாறு
-5 %
பெரியாரின் நண்பர்: டாக்டர் வரதராஜூலு நாயுடு வரலாறு
பழ.அதியமான் (ஆசிரியர்)
₹499
₹525
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹40 shipping fee* (Free shipping for orders above ₹500 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.
தென்னாட்டுத் திலகர் என்று புகழப்பெற்ற சேலம் டாக்டர் வரதராஜுலு நாயுடுவின் (1887-1957) வாழ்க்கை வரலாறு இந்நூல். தன் பேச்சாற்றலால் தமிழகக் காங்கிரசை மக்களிடம் கொண்டுசென்ற இப் பேராளுமையின் சமூக, அரசியல், பத்திரிகைத் துறைப் பங்களிப்பை விவரிக்கும் வரலாறு இது. தமிழக சமூக நீதிப் போராட்டங்களான சேரன்மாதேவி குருகுலப் போராட்டம், காஞ்சிபுரம் காங்கிரசு மாநாடு, கல்பாத்தி தலித் நுழைவுத் தடுப்பு, (குலக்) கல்வித் திட்ட எதிர்ப்பு . . . உள்ளிட்ட அரை நூற்றாண்டுத் தமிழக சமூக அரசியல் வரலாற்றின் முக்கிய நிகழ்வுகளைச் சமகால ஆதாரங்களின் அடிப்படையில் இந்நூல் விவரிக்கிறது. வ.உ.சி., பெரியார், இராஜாஜி, காந்தி, சாவர்கர், ஷியாமா பிரசாத் முகர்ஜி, கே.எம். பணிக்கர் தொடர்பில் இது வரை வெளிவராத பல முக்கியச் செய்திகள் முதன் முறையாக இந்நூலில் இடம்பெறுகின்றன. அக்கால இந்திய - தமிழக அரசியல் பின்புலத்தில் வரதராஜுலு நாயுடுவின் வரலாறு சுவாரசியமான நடையில் எழுதப்பட்டுள்ளது.
Book Details
Book Title பெரியாரின் நண்பர்: டாக்டர் வரதராஜூலு நாயுடு வரலாறு (Periyarin Nanbar)
Author பழ.அதியமான் (Pazha.Adhiyaman)
ISBN 9789381969120
Publisher காலச்சுவடு பதிப்பகம் (Kalachuvadu Publications)
Pages 480
Published On Nov 2011
Year 2012
Format Paper Back
Category TamilNadu Politics | தமிழக அரசியல்

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha

By the same Author

சாப்பாட்டில் சகல வகுப்புகளையும் சேர்ந்த பிராமணர் ஒரு பக்கமாகவும் சகல வகுப்புகளையும் சேர்ந்த பிராமணரல்லாதவர் ஒரு பக்கமுமாகவே இருந்து சாப்பிடவேண்டும். குருகுலத்தில் இவ்வித்தியாசம் கூடாது என்று நான் சொன்னேன். ஆனால் இந்த வேற்றுமையை ஒழிக்க முடியாதென்று (வ.வே.சு.) ஐயர் கூறினார். இதைக் கேட்டதும் நானும் ஸ்..
₹399 ₹420
ராஜா வந்திருக்கிறார்கு. அழகிரிசாமயின் கதைகள் எளிய நடை, சித்தரிப்பின் லாவகம், உள்ளோடும் துயர இழை, அல்லது மிதக்கும் நகைச்சுவை, கமழும் மண்ணின் மணம் என அழகுகள் கூடி வந்தவை. தமிழில் சிறுகதைக் காக சாகித்திய அக்காடமி பரிசு பெற்ற முதல் எழுத்தாளர். ‘ராஜா வந்திருக்கிறார்’ என்ற அவரது இந்தத் தேர்ந்தெடுத்த கதை..
₹333 ₹350
பாரதியின் அனைத்துக் கவிதைகளும் அடங்கிய நவீனப் பதிப்பு. சரளமாகப் பொருள் உணரும்படிக் கடின சந்திகள் பிரித்த எளிய பதிப்பு. சீர் அமைப்பு மாறாதது. நிறுத்தற் குறியீடுகள் கொண்டது. அருஞ்சொற்களுக்குப் பொருள் அமைந்தது. பொருள் அடிப்படையில் வகைப்படுத்திய பதிப்பு. நவீன இளம் வாசகர்களுக்கான எளிய பதிப்பு. முழுக..
₹641 ₹675
கு. அழகிரிசாமி புதுமைப்பித்தன் பரம்பரை எழுத்தாளர். சிறுகதை, கட்டுரை, மொழிபெயர்ப்பு, பதிப்பு, நாடகம், கவிதை, நாவல் ஆகிய இலக்கிய வகைகளில் தனித்தன்மையுடன் செயல்பட்டவர். எளிய நடை, சித்திரிப்பின் லாவகம், உள்ளோடும் துயர இழை, மிதக்கும் நகைச்சுவை, கமழும் மண்ணின் மணம் என அழகுகள் கூடிவந்த கலை அழகிரிசாமியின்..
₹1,596 ₹1,680