- Edition: 1
- Year: 2007
- Page: 104
- Format: Paper Back
- Language: Tamil
- Publisher: மித்ர வெளியீடு
பெருவெளிப் பெண்
’பெருவெளி’ எல்லைகளற்றது. குறுக்குக் கோடுகளற்றது. சுதந்திரமானது. விடுதலையின் பஞ்சுப்பொதி நிரம்பியது. வார்த்தைகளுக்கு அவசியமற்ற மெளனத்தை அப்பிக் கொண்டிருப்பது. எடையற்றுப் பறத்தலைச் சாத்தியமாக்குவது. விசயலட்சுமிக்கும் தன் கவிதைப் பயணமே அந்தப் பறத்தலைச் சாத்தியமாக்குகிறது.
-தமிழச்சி தங்கபாண்டியன்
பெருவெளிப் பெண்ணின் குரல் மானுட சமூகத்தின் மனசாட்சியாய்ப் பேசுகிறது. இதன் அலை நீளம் அண்டங்களைக் கடந்து செல்லும் அதிர்வுகள் அகச்சுவர்களில் எதிரொலிக்கும் காலங்கள் இதனுள் கரைந்து போகும். மாயபிம்பங்கள் மாற்றி சமூகத்தின் சுயம் காட்டும் கண்ணாடியாய்ப் பிரதிபலிக்கிறது
-இரா.கனகராசு
‘தமிழ்க்கவிதைகளில் பெண்ணுரிமை’ எனும் முக்கிய ஆய்வு நூலைத் தமிழுக்குத் தந்தவர். புரட்சிகர சிந்தனைக்குச் சொந்தக்காரர். தமிழாசிரியர்; இயக்கவாதி. ‘முரண்களரி’, ‘வாழை’ - அமைப்புகளில் பங்காற்றுபவர். மென்மையான தோற்றமும் உறுதியான உள்ளமும் இவருடையவை. அழகும் நேர்த்தியும் அரசியலும் கவித்துவமும் ஒருங்கே பெற்றவை இவரது கவிதைகள். இவரது கவிதைகள் தரும் வாசிப்பனுபவம் அலாதியானது.
-யாழினி முனுசாமி.
Book Details | |
Book Title | பெருவெளிப் பெண் (Peruveli Pen) |
Author | ச.விசயலட்சுமி (S.Vijayalaskhmi) |
Publisher | மித்ர வெளியீடு (Mitra Veliyedu) |
Pages | 104 |
Year | 2007 |
Edition | 1 |
Format | Paper Back |