Menu
Your Cart

பெ. மணியரசனின் சொல்லாயுதம்

பெ. மணியரசனின் சொல்லாயுதம்
-5 %
பெ. மணியரசனின் சொல்லாயுதம்
கவிபாஸ்கர் (ஆசிரியர்), பெ.மணியரசன் (ஆசிரியர்)
₹105
₹110
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
எதிர்பாராத சிக்கல்கள் காரணமாக ஆர்டர்கள் அனுப்புவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. ஜனவரி 25ஆம் தேதிக்குள் சீராகிவிடும். இதனால் ஏற்படும் சிரமத்திற்கு மன்னிக்கவும்.
இம்மண்ணில் தலைவர்கள், அறிஞர்கள், கவிஞர்கள், இன்னும் பல்வேறு அறிவுச்சான்றோர்கள் தோன்றினார்கள்; தோன்றுவார்கள்! அவர்களிடம் சிறந்த கொள்கை இலட்சியங்கள் இறுதி வரை தடம் மாறாது தங்கியிருந்தால் மட்டுமே காலம் அக்கொள்கையை - இலட்சியத்தை, இது தனக்குத் தேவையான ஊட்டச்சத்து என்று உட்கொள்ளும்; அவ்வினத்திற்கு உயிரூட்டி வார்த்தெடுக்கும். அந்த வகையில் தமிழ்த்தேசிய அறவியல் இலட்சியப் பதாகையை வானம் உயர ஏந்தி நிற்கும் தலைவராய் எங்கள் அறிவாசன் பெ.மணியரசன் நிற்கிறார்! காலம் கவனிக்கத் தொடங்கிவிட்டது! இந்நூல் அதற்குச் சான்று பகரும்! அயல் இன ஆக்கிரமிப்பிலிருந்து ஓர் இனம் தன்னைக் காத்துக் கொள்ள போர்க் கருவிகளைப் போலவே, மொழி என்ற கருவியும் பயன்படுகிறது. தன்னின மக்களை உணர்ச்சிப் பெருக்கோடு ஒருங்கிணைத்து, எழுச்சியூட்டி - ஆக்கிரமிப்பாளர்களைத் தாக்க அணியப்படுத்துகிறது மொழி! விஞ்ஞானம் சமூகத்திற்குப் பணியாற்ற வேண்டும்; விஞ்ஞானம் சமூகத்தின் மீது ஆதிக்கம் செலுத்தக்கூடாது. தொழில் நுட்பம் சமூகத்திற்கு தொண்டு செய்ய வேண்டும். தொழில் நுட்பம் சமூகத்தின் மீது அதிகாரம் செலுத்தக் கூடாது. தொழில் நுட்பம் சமூகத் தற்குக் கீழ்ப்படிய வேண்டும். சமூகம் தொழில் நுட்பத் திற்குக் கீழ்ப்படியக்கூடாது. விஞ்ஞானம் மனிதர்களுக்காக – விஞ்ஞானத்திற்காக மனிதர்கள் இல்லை. அரசியல் தலைவர்கள் - தமிழ்நாட்டுக் காவலர்களாக இல்லை என்பதற்காக நாம் ஒதுங்கி செயலற்று இருக்க வேண்டியதில்லை. நம் மக்களைக்காக்க நாம் முன் வரவேண்டும். புறப்பட வேண்டும். தற்காப்பு உணர்ச்சியும், தற்காப்பு ஆற்றலும் கொண்ட மக்கள் தான் வாழ்வார்கள். காரல் மார்க்சை தெரிந்து கொள்வது தவறல்ல, ஆனால் தொல்காப்பியரைத் தெரிந்து கொள்ளாமல் காரல் மார்க்சைத் தெரிந்து கொள்வதுதான் தவறு ! மக்களிடம் பல பலவீனங்கள் இருக்கின்றன. பணம், பதவி மீது பிரமிப்புகள் இருக்கும்; எல்லாவற்றையும் சாதிக் கண்கொண்டும், மதக் கண்கொண்டும் பார்ப்பவர்கள் இருக்கிறார்கள். அந்தப் பலவீனங்களுக்கு நீங்கள் ( இலட்சியர்கள் ) பலியாகக் கூடாது. தத்துவம் வழிகாட்டவும் செய்யும்; வழிமறிக்கவும் செய்யும். தத்துவம் ஓர் போர் வாள் போல் பயன்படுத்த பட வேண்டும். போர் வாள் மழுங்கிபோனால், புதிய போர்வாளை ஏந்த வேண்டும். தமிழ்த்தேசியம் என்பது வெறும் அரசியல் முழக்கம் மட்டுமல்ல – தமிழினத்தை அரசியலில் - ஆன்மிகத்தில் - சமூகத்தில் மறுவார்ப்பு செய்வது! எனவே, இவற்றில் நாம் கவனம் செலுத்த வேண்டும்.
Book Details
Book Title பெ. மணியரசனின் சொல்லாயுதம் (P.Maniyarasan sollayutham)
Author பெ.மணியரசன் (Pe.Maniyarasan), கவிபாஸ்கர்
Publisher பன்மை வெளி (Panmai Veli)
Edition 1
Format Paper Back
Category Biography | வாழ்க்கை வரலாறு, Tamil Nationalism | தமிழ்த் தேசியம்

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha