Menu
Your Cart

60 நாட்களில் அரசியல்

60 நாட்களில் அரசியல்
-5 % Out Of Stock
60 நாட்களில் அரசியல்
கோமல் அன்பரசன் (ஆசிரியர்)
₹119
₹125
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
Out of Stock
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
அரசியல் தூய்மையாக வேண்டும் அரசியல் மக்களுக்கானதாக மாற வேண்டும் நல்லரசியல் நடக்கிற நாடாக வேண்டும் என்கிற எண்ணம் கொண்டவரா நீங்கள்? அப்படியானால் இந்தப் புத்தகம் உங்களுக்கானதுதான். எனக்கு அரசியலே பிடிக்காது நமக்கு எதற்கு அந்த சாக்கடை எல்லாம் ? என்று முகம் சுளிப்பவரா நீங்கள்? முதலில் இந்த புத்தகத்தை நீங்கள் தான் படிக்க வேண்டும். அரசியலில் இறங்கி நம்முடைய மக்களுக்கு ஏதாவது நல்லது செய்ய நினைக்கிறேன். அதற்கு முன்பு அரசியலில் என்னதான் நடக்கிறது என்பதை பளீரென்று தெரிந்து கொள்ள விரும்புகிறேன் என்பவரா நீங்கள் ? அப்படியென்றால் இந்த புத்தகம் உங்களுக்கானதுதான். ஆமாம் நீங்கள் யாராக இருந்தாலும் இந்தப் புத்தகம் உங்களை நிச்சயம் புரட்டிப் போடும். இதுவரை பார்த்த கேள்விப்பட்ட பழகிய அரசியலில் இருந்து புதிதாக பலவற்றை உங்களுக்கு இந்நூல் எடுத்துக்காட்டும். ஏனெனில் நம்முடைய பிறப்பு முதல் இறப்பு வரை எல்லாவற்றையும் இங்கே அரசியல்தான் தீர்மானிக்கிறது.அரசியலின்றி அணுவும் அசைவதில்லை.ஆனாலும் அரசியலில் இருந்து மக்கள் அந்நியப்பட்டுக்கொண்டே இருக்கிறார்கள். அல்லது மக்களிடம் இருந்து அரசியல் அந்நியப்பட்டுக் கொண்டே போகிறது. எல்லாவற்றையும் மேலே இருப்பவன் பார்த்துக்கொள்வான் என்று நீங்களும் நானும் ஒதுங்கிப் போய்விட முடியாது.நம்மைப் பாதிக்காதவரை எதை பற்றியும் கண்டுகொள்வதில்லை என்று ஒவ்வொருவரும் நினைத்து ஒதுங்கிவிட்டால் ஒருநாள் மொத்தமாக இழக்க வேண்டி வரும் . அப்படி நிகழ்வதற்கு முன்பே தடுத்து நிறுத்த வேண்டிய பொறுப்பும், கடமையும் நம் ஒவ்வொருவர் கைகளிலும் உள்ளது. அதற்கான முயற்சிதான் இந்த 60 நாட்களில் அரசியல்.
Book Details
Book Title 60 நாட்களில் அரசியல் (60 natkalil arasiyal)
Author கோமல் அன்பரசன் (Komal Anbarasan)
Publisher நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (New century Book house)
Published On May 2022
Year 2022
Edition 1
Format Paper Back
Category Politics| அரசியல், Essay | கட்டுரை

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha

By the same Author

தமிழ் தொலைக்காட்சியின் முடிசூடா மன்னர் கலாநிதி மாறன். கூர்மையான மதிநுட்பம், போட்டியாளர்களை வளரவிடக்கூடாது என்ற வெறி, தேவையான அளவு அரசியல், அதிகாரப் பின்னணி, வெற்றிபெற்றே ஆகவேண்டும் என்ற வேகம் என அனைத்தும் சேர்ந்து மிகக் குறுகிய காலத்தில் தென்னிந்தியாவின் மீடியா மன்னராக ஆகியுள்ளார் கலாநிதி...
₹81 ₹85
எழுத்தாளர் அசோகமித்திரனின் ‘18வது அட்சக்கோடு’ நாவலில், பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தில் திருவிதாங்கூர் திவானாக இருந்த சர்.சி.பி.ராமசாமி குறித்த விவரிப்பு உள்ளது. இதன் வழி சர்.சி.பி.ராமசாமியை தமிழ் வாசகர்கள் அறிவார்கள். ஆனால், சி.பி.ராமசாமி என்ற ஆளுமையின் முழுமையான சித்திரத்தை உதாரணமான சம்பவங்களுடன் அன்ப..
₹238 ₹250