Menu
Your Cart

ஆளுமைகள்

ஆளுமைகள்
-5 %
ஆளுமைகள்
அ.மார்க்ஸ் (ஆசிரியர்)
₹285
₹300
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
இத் தொகுப்பில் உள்ள கட்டுரைகள் எல்லாம் இப்படி ‘ஆளுமைகள்’ என்கிற பெயரில் வெளிவரும் ஒரு தொகுப்புக்காக எழுதப்படுகின்றன எனும் உணர்வோடு எழுதப்பட்டவை அல்ல. அவ்வப்போது பல்வேறு பின்னணிகளில் எழுதப்பட்ட கட்டுரைகள் இவை. இன்குலாப், பெருஞ்சித்திரனார், மைதிலி சிவராமன், மருத்துவர் ஜீவா முதலானவர்கள் குறித்த கட்டுரைகள் அவர்களின் நினைவு நாட்களில் பேசிப் பின் இதழ்களில் வெளிவந்தவை. அல்லது அவர்களின் நினைவு மலர்களுக்காக எழுதப்பட்டவை. எட்வர்ட் செய்த், பரந்தாமன், பாலகோபால், அனந்தமூர்த்தி ஆகியோர் குறித்த கட்டுரைகள் அவர்களின் மரணத்தை ஒட்டி கண்கள் கசிய மனம் நெகிழ்ந்து எழுதியவை. இம்மானுவேல் சேகரன் குறித்த கட்டுரை பேராசிரியர் ஒருவரது ஆய்வேடு நூலாக வரும்போது அதற்கு முனுரையாக எழுதப்பட்டது. இந்தியாவின் ஆக முன்னோடிக் கம்யூனிஸ்ட் ஆகிய எம்.என்.ராய் குறித்த கட்டுரை அவரை நான் தெரிந்துகொள்ள வேண்டும் என அவரது நூல்களில் சிலவற்றைப் படித்தபோது எழுதப்பட்டது. ராயின் பாசிசம் குறித்த நூலுக்கு முன்னுரை எழுத ஒரு வாய்ப்பு வந்தபோது இப்படி அதைப் பயன்படுத்திக் கொண்டேன். எல்லோருக்கும் தெரியும் நான் காந்தி, நேரு ஆகியோர் மீது மிக்க மரியாதை கொண்டவன் என்பது. இந்தக் கட்டுரைகளில் நான் கூறியுள்ள அனைத்தும் சமகால வரலாற்று உண்மைகள். உ.வே. சாமிநாதர் அவர்கள் தன் ஆசிரியர்களான மகா வித்வான் மீனாட்சி சுந்தரம் பிள்ளை மற்றும் வித்வான் தியாகராயச் செட்டியார் குறித்து எழுதியுள்ள இரு நூல்களும் அக் காலகட்ட வரலாற்றுச் சூழலின் ஒருசில கூறுகளை நாம் புரிந்து கொள்ள உதவும். அப்படி இது குறித்தும் வாசிக்கும் நீங்கள் உணர்ந்தீர்களாயின் அதுவே இந்நூலின் வெற்றி.
Book Details
Book Title ஆளுமைகள் (Alumaigal)
Author அ.மார்க்ஸ் (A.Marx)
Publisher Zero degree/எழுத்து பிரசுரம் (Zero degree/Ezhuthu Pirasuram)
Published On Aug 2021
Year 2021
Edition 1
Format Paper Back
Category Politics| அரசியல், Essay | கட்டுரை, New Releases | புது வரவுகள்

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha

By the same Author

குற்றம் தண்டனை மரண தண்டனைஅஜ்மல் கசாப், அப்சல் குரு ஆகியோர் தூக்கிலிடப்பட்டதன் பின்னணியில் உள்ள விஷயங்கள், மரண தண்டனை கொடிய குற்றங்களுக்கு எதிரான அச்சுறுத்தும் கருவி என்பது உண்மைதானா போன்ற விவாங்கள் இதில் உள்ளன.தூக்கிலிடப்படுபவர்கள் பெரும்பாலும் அடித்தளத்தைச் சேர்ந்தவர்கள். அவர்களது மரணத்தால் துன்புற..
₹95 ₹100
காந்தியும் தமிழ்ச் சனாதனிகளும்காந்தியும் தமிழ்ச் சனாதனிகளும் பலதரப்பு மக்களையும் ஒன்றாக இணைத்துப் பார்க்கக்கூடிய பார்வை இந்திய வரலாற்றில், குறிப்பாக சென்ற நூற்றாண்டு வரலாற்றில் காந்தியின் அளவுக்கு யாரிடமும் இல்லை. இந்தியாவை எந்த ஒரு குறிப்பிட்ட மக்களுக்கான தேசமாகவும் அவர் பார்க்க வில்லை. பல்வேறு சிற..
₹143 ₹150
கால்டு​வெலின் திராவிட ​மொழிக்குடும்பம் பற்றிய கண்டுபிடிப்பும் சிந்து சம​வெளி அகழ்வுகள் ​வெளிப்படுத்திய உண்​கைளும் ​சென்ற நூற்றாண்டில் தமிழக அரசிய​லை பாதித்த இரு முக்கிய நிகழ்ச்சிகள். இதன் மூலம் எழுச்சி ​​​கொண்ட பார்ப்பன எதிர்ப்பு அரசியலின் வீச்சில் ஓராண்டு காலம் ஓய்ந்து கிடந்த தமிழகப் பார்ப்பனர்கள் ..
₹95 ₹100
கூலி விலை லாபம்மார்க்ஸ், சாதாரண தொழிலாளர்களின் புரிதலுக்காக 1849ல் எழுதிய கட்டுரைகளின் தொகுப்பு. 165 ஆண்டுகளுக்கு முன்பு எழுதப்பட்டதுதான் என்றாலும் இன்றைக்கும் படிக்கும் எவருக்கும் புதிய தெளிவைத் தரும் ஒரு செம்பனுவல்...
₹90 ₹95