-5 %
தன்னாட்சி: வளமான இந்தியாவை உருவாக்க
அரவிந்த் கெஜ்ரிவால் (ஆசிரியர்)
Categories:
Indian politics | இந்திய அரசியல்
₹76
₹80
- Year: 2013
- ISBN: 9788184937503
- Page: 120
- Language: Tamil
- Publisher: கிழக்கு பதிப்பகம்
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹40 shipping fee* (Free shipping for orders above ₹500 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.
தமிழில்: கே.ஜி.ஜவர்லால் ஊழலுக்கு எதிரான அண்ணா ஹசாரேயின் இயக்கத்தின்மூலம் இந்தியா முழுதும் அறியப்பட்டவர் அரவிந்த் கெஜ்ரிவால். இப்போது ஆம் ஆத்மி (பொது ஜனங்கள்) கட்சி என்ற அரசியல் கட்சியை ஆரம்பித்திருக்கிறார். ஊழலை ஒழிக்க ஜன் லோக்பால் என்ற சட்டம் வேண்டும் என்ற அடிப்படையை முன்வைத்துப் போராடிய கெஜ்ரிவால், அது மட்டும் போதாது, கூடவே மக்களுக்குத் தன்னாட்சி அதிகாரம் வேண்டும் என்றும் சொல்கிறார். ஏன் ஊழல் நடக்கிறது என்பதை அழகாகப் பகுப்பாய்வு செய்து விளக்கும் கெஜ்ரிவால், இப்போது இருக்கும் அரசியல் அமைப்பினால் ஊழலை எவ்விதத்திலும் ஒழிக்க முடியாது என்பதை இந்தியாவில் நடக்கும் பல்வேறு விஷயங்களை ஆதாரமாக வைத்து விளக்குகிறார். ஊழலை ஒழிக்கவே முடியாதா? மக்களுக்கு நலத்திட்டங்கள் போய்ச் சேருமாறு செய்யமுடியாதா? மக்களை நிரந்தர ஏழைகளாக வைத்திருக்கும் அரசிடமிருந்து விமோசனமே கிடைக்காதா? மாற்று வழிகள் உள்ளன என்கிறார் கெஜ்ரிவால். உலகின் பல்வேறு பகுதிகளில் உள்ள மாற்று, இந்தியாவிலேயே சில கிராமங்களில் நடைபெற்றுள்ள சில சோதனைகள் என அனைத்தையும் எடுத்துக்காட்டும் கெஜ்ரிவால், எம்மாதிரியான சட்ட மாற்றங்களைக் கொண்டு மக்களுக்குத் தன்னாட்சி அதிகாரத்தைத் தரமுடியும் என்பதை அழகாக எடுத்துக்கூறுகிறார். எளிமையான, தெளிவான விளக்கங்கள் கொண்ட இந்தப் புத்தகத்தை இந்தியர்கள் அனைவரும் படிக்கவேண்டும்.
Book Details | |
Book Title | தன்னாட்சி: வளமான இந்தியாவை உருவாக்க (Thannaatchi: Valamaana Indhiyaavai Uruvaakka) |
Author | அரவிந்த் கெஜ்ரிவால் (Arvind Kejriwal) |
ISBN | 9788184937503 |
Publisher | கிழக்கு பதிப்பகம் (Kizhakku Pathippagam) |
Pages | 120 |
Published On | Nov 2012 |
Year | 2013 |