Menu
Your Cart

கட்சி அரசியலிருந்து மக்கள் அரசியல்

கட்சி அரசியலிருந்து மக்கள் அரசியல்
-5 %
கட்சி அரசியலிருந்து மக்கள் அரசியல்
க.பழனித்துரை (ஆசிரியர்)
₹143
₹150
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
உலகில் மன்னராட்சியால் அவதிப்பட்ட மக்கள், தங்களுடைய பிரச்சினைகளைத் தீர்ப்பதற்காகப் போராடி, மக்களாட்சி என்னும் புதிய ஆட்சிமுறைக்கு வந்தது மானுட வரலாற்றில் ஒரு சிலிர்ப்பூட்டும் நிகழ்வு. மக்களாட்சியில் அரசியல் கட்சிகளின் இருப்பு முதன்மையானதாய் இருக்கின்றன. ஆனால் அவற்றால் சமூகத்திலுள்ள அனைவருக்கும் உரிமைகளையும், சமத்துவத்தையும், சமூக நீதியையும் பெற்றுத் தர இயலுகிறதா? இந்த நூலில் க. பழனித்துரை, மக்களாட்சி செயல்பாட்டில் கட்சி அரசியலிலுள்ள தேக்கநிலையை விளக்குவதுடன் மக்கள் அரசியலுக்கான புதிய கருத்தாடல்களை நம்மிடம் கவனப்படுத்துகிறார். இதில் பதினாறு கட்டுரைகள் இடம்பெறுகின்றன. அவை இந்திய அரசியலின் தாழ்நிலை, மங்கிவரும் மக்களாட்சி, நமது ஆளுகையும் நிர்வாகமும், குறைந்தபட்ச மக்களாட்சியில் நாம் என மக்களாட்சியில் உள்ள குறைபாடுகளைத் தொட்டுக் காண்பிக்கின்றன. பிறகு, மக்களாட்சியை வலுப்படுத்தச் செய்ய வேண்டியவை, மக்கள் அரசியலைக் கட்டமைத்தல், மக்களை அதிகாரப்படுத்துதல், அரசியல் கட்சிக்கு ஊதியம் போன்ற தலைப்புகளில் மக்கள் அரசியலைக் கட்டமைப்பதற்குத் தேவையான அடிப்படைகளை எளிதில் புரிந்துகொள்ளும் வண்ணம் நூலாசிரியர் விளக்குகிறார். மக்களாட்சியில் வாழும் நாம் குடிமக்களாகச் செயல்பட்டு, ‘பங்கேற்பு மக்களாட்சி’ மூலம் எவ்வாறு மேம்பாட்டுக்கான அரசாங்கத்தை உருவாக்க முடியும் என்பதைக் கோடிட்டுக் காட்டியிருப்பது இந்த நூலின் தனிச் சிறப்பு. மக்களாட்சி செயலிழந்துவிட்டது எனக் குறை கூறுவோரும் அதைச் செப்பனிட முனைப்புக் காட்டுவோரும் கட்டாயம் படிக்க வேண்டிய நூல்.
Book Details
Book Title கட்சி அரசியலிருந்து மக்கள் அரசியல் (Katchi arasiyalilirunthu makkal arasiyalukku)
Author க.பழனித்துரை (K.Palanithurai)
ISBN 978 81 7720 337 0
Publisher அடையாளம் பதிப்பகம் (Adayalam Publication)
Pages 144
Year 2023
Edition 1
Format Paper Back
Category Politics| அரசியல், Essay | கட்டுரை, 2023 New Arrivals

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha

By the same Author

டாக்டர் க.பழனித்துரை அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் பயின்றவர். அங்கேயே ஆசிரியராக வாழ்க்கையைத் தொடங்கியவர், பின்பு காந்திகிராம கிராமியப் பல்கலைக்கழகத்தில் பேராசிரியராகப் பணியில் சேர்ந்தார். தற்சமயம், பணி ஓய்வு பெற்று, பாண்டிச்சேரி அரவிந்தோ சொசைட்டி கிராமப்புற மேம்பாட்டு இயக்கத்தின் கௌரவ இயக்குனராக செயல..
₹209 ₹220
நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் மக்களுக்கு மிகவும் அருகிலிருக்கும் ஓர் அரசாங்கம். அது மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி என மூன்று அலகுகளால் ஆனது. தெளிவாக வரையறுக்கப்பட்ட நிலப்பகுதியையும், அங்கு வாழும் மக்களின் ஆளுகையையும், நிர்வாக அமைப்பையும் அவை கொண்டிருக்கின்றன. ‘எங்கள் நகரம் எங்கள் ஆட்சி’ என்னும் ..
₹114 ₹120