-5 %
Out Of Stock
சென்னைப் பெருநகர தொழிற்சங்க வரலாறு
₹143
₹150
- Year: 2003
- Page: 384
- Language: தமிழ்
- Publisher: அலைகள் வெளியீட்டகம்
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
Out of Stock
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
சென்னை நகரத்தில் ஏற்பட்ட தொழில் வளர்ச்சியோடு தொழிலாளர் வர்க்கம் உருவானதையும் தொழிற் சங்கங்கள் தோன்றுமுன்னர் நடந்த போராட்டங்களையும் விரிவாக முன்வைத்த வீரராகவனின் ஆய்வு, முதல் உலகப் போர் முடிந்த காலத்தில் தொழிற் சங்கங்கள் தோன்றியதையும் காட்டுகிறது. இக்கால கட்டத்தில் தேசிய இயக்கத்தோடு தொழிற்சங்கங்கள் கொண்ட ஊடாட்டத்தையும் பகுத்தாய்ந்தார் வீரராகவன். வீறார்ந்த போராட்டங்கள் நடந்தபின் ஒரு பத்தாண்டு கால இடைவெளியும் விழுகிறது. உலகப் பொருளாதாரப் பெருமந்தத்தைத் தொடர்ந்து தொழிலாளர் போராட்டங்கள் மீண்டும் தலையெடுக்கின்றன. இடதுசாரி சக்திகளும் தொழிற்சங்கங்களில் தலைமையேற்கத் தொடங்குகின்றன. பெருநம்பிக்கையைத் தொடக்கத்தில் கொடுத்த முதல் காங்கிரஸ் அமைச்சரவையின் தொழிலாளர் விரோத நிலைப்பாடுகள் ஏமாற்றம் தந்து, இரண்டாம் உலகப் போர் வெடிக்கும் தருணத்தில் வீரராகவனின் நூல் முடிகிறது. - ஆ. இரா. வேங்கடாசலபதி (தே. வீரராகவன் இறந்தபோது எழுதப்பட்ட அஞ்சலிக் கட்டுரையில் இருந்து)
Book Details | |
Book Title | சென்னைப் பெருநகர தொழிற்சங்க வரலாறு (Chennai Perunagara Thozhirsanga Varalaaru) |
Author | தே.வீரராகவன் (T.Veeraraghavan) |
Translator | சு.சீ.கண்ணன் (Su.See.Kannan) |
Publisher | அலைகள் வெளியீட்டகம் (Alaikal Veliyeetagam) |
Pages | 384 |
Year | 2003 |
Category | Translation | மொழிபெயர்ப்பு, Marxism | மார்க்சியம் |