- Edition: 1
- Year: 2009
- Page: 416
- Format: Paper Back
- Language: Tamil
- Publisher: அலைகள் வெளியீட்டகம்
மதம்-மக்கள்- புரட்சி
நாங்கள் எங்களது கோட்பாட்டிலும் கொள்கையிலும் மிகவும் கறாராக இருக்க வேண்டிய தேவை இருந்தது. கட்சியில் சேருகிற ஒருவர் நாத்திகவாதியாக இருக்க வேண்டும் என்று நாங்கள் வற்புறுத்தவில்லை; மத எதிர்ப்பு எண்ணங்களுக்கு நாங்கள் ஆட்பட்டிருக்கவில்லை. அவர் மார்க்சிய-லெனினிய கொள்கைகளை முழுவதுமாக ஏற்றுக் கொண்டவராக இருக்க வேண்டும் என்பதே எங்கள் எதிர்பார்ப்பு. அன்றைய சூழல்தான் எங்களை இப்படிக் கறாராக இருக்கச் செய்தது. ஏனென்றால் நாங்கள் கட்சிக் கோட்பாட்டுத் தெளிவோடு இருப்பதை உறுதிப்படுத்த வேண்டியிருந்தது. எங்களுடைய நிலைமையில் அது அரசியல் ரீதியாகச் சாத்தியமானதாகவும் இருந்தது என்பதும் உண்மைதான். ஏனென்றால் பெருந்திரளான மக்கள் - தொழிலாளர்கள், விவசாயிகள், எங்களை ஆதரித்த மற்றவர்கள் - தீவிரமானக் கத்தோலிக்கர்களாக இருக்கவில்லை. தனி மனிதர்கள் கட்சியில் சேருவதற்குத் தங்களது நம்பிக்கைகளைக் கைவிட வேண்டும் என்று நாங்கள் கட்டாயப்படுத்தவில்லை. ஆனால் கட்சியில் சேர்ந்துவிட்ட ஒருவர் அனைத்து வகையிலும் கட்சியின் கோட்பாட்டையும் கொள்கையையும் ஏற்றுக்கொண்டவராக இருப்பதை உறுதிப்படுத்தினோம்.
Book Details | |
Book Title | மதம்-மக்கள்- புரட்சி (Matham-makkal-puratchi) |
Author | ஃபிடல் காஸ்ட்ரோ (Fidel Castro) |
Translator | அ.குமரேசன் (A.Kumaresan) |
Publisher | அலைகள் வெளியீட்டகம் (Alaikal Veliyeetagam) |
Pages | 416 |
Year | 2009 |
Edition | 1 |
Format | Paper Back |
Category | Marxism | மார்க்சியம் |