Menu
Your Cart

பொருளற்றதாக்கப்படும் அரசியல் சட்ட உரிமைகள்: நெருக்கடி நிலை உலகம் - 3

பொருளற்றதாக்கப்படும் அரசியல் சட்ட உரிமைகள்: நெருக்கடி நிலை உலகம் - 3
-5 %
பொருளற்றதாக்கப்படும் அரசியல் சட்ட உரிமைகள்: நெருக்கடி நிலை உலகம் - 3
அ.மார்க்ஸ் (ஆசிரியர்)
₹637
₹670
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
இரண்டாம் உலகப் போருக்குப் பின் மனித உரிமைகளின் முக்கியத்துவம் உலகெங்கிலும் உணரப்பட்டது. உலகளாவிய மனித உரிமைப் பிரகடனம் உருவானது. குடிமக்கள் அனைவரும் சமமாக நடத்தப்படுதல், எல்லோரும் எல்லாமும் பெறுவதற்கான வாய்ப்புகளைப் பெறுதல், ஆகக் கீழே உள்ளவர்களும், எண்ணிக்கையில் சிறிய பிரிவினர்களும் தங்களை மேம்படுத்திக் கொள்ளுதல், தமது நம்பிக்கைகளையும், பண்பாடுகளையும் காத்தல் உட்பட எல்லா உரிமைகளையும் பெறுவதற்கு அரசு பொறுப்பேற்றல் ஆகிய மதிப்பீடுகள் மேலுக்கு வந்தன. இப்படியாக உலக அளவில் மனித உரிமைப் பண்பாடு ஒன்று உருவானது. விடுதலைபெற்ற இந்தியா இதற்குரிய ஒரு அரசியல் சட்டத்தையும் உருவாக்கியது. எனினும் அதே நேரத்தில் இவற்றைப் பொருளற்றதாக்கும் காலனிய ஆள்தூக்கிச் சட்டங்களும் தொடர்ந்தன. போகப் போக அரசியல்சட்டத்தின் அடிப்படைகளுக்கு எதிரான அடக்குமுறைச் சட்டங்களும் அதிகமாயின. கடந்த பத்தாண்டுகளில் அரசியல் சட்ட நிறுவனங்களும் தாக்குதலுக்கு ஆளாயின. அடித்தள மக்களுக்கான இட ஒதுக்கீடு, சிறுபான்மை மக்களின் உரிமைகள் எல்லாம் பொய்யாய்ப் பழங்கதையாய்ப் போயின. இந்த மாற்றங்கள் குறித்த ஆழமும் விரிவும் மிக்க ஒரு முக்கிய தொகுப்பாக உருப்பெற்றுள்ளது அ,மார்க்சின் இத் தொகுப்பு. ஒரு ஐம்பது ஆண்டுகால மனித உரிமைகளின் வரலாற்றுத் தொகுப்பாகவும், இன்றைய அரசியல் மற்றும் மனித உரிமைச் சட்ட மாற்றங்களைப் புரிந்துகொள்வதற்கான ஓர் அடிப்படை ஆவணமாகவும் உருப்பெற்றுள்ளது இந்நூல். "எனினும் நம்பிக்கை இழக்க வேண்டியதில்லை. நம் மூத்த முன்னோடிகள் உருவாக்கிய அடிப்படைக் கோட்பாடுகளுக்கு எதிரான நம்பிக்கைத் துரோகங்களுக்குப் பணிந்துபோவதல்ல வரலாற்று நியதி. நம் முன்னோடிகள் உருவாக்கிய அடிப்படைக் கோட்பாடுகளுக்கு எதிரான நம்பிக்கைத் துரோகங்கள் அத்தனை எளிதாக வெற்றிபெற இயலாது." - நோம் சாம்ஸ்கி
Book Details
Book Title பொருளற்றதாக்கப்படும் அரசியல் சட்ட உரிமைகள்: நெருக்கடி நிலை உலகம் - 3 (Porulatradhakkapdum arasiyal satta urimaigal)
Author அ.மார்க்ஸ் (A.Marx)
Publisher எழுத்து பிரசுரம் | Zero Degree Publishing (Ezhuthu Pirasuram | Zero Degree Publishing)
Published On Sep 2022
Year 2022
Edition 01
Format Paper Back
Category Politics| அரசியல், Indian politics | இந்திய அரசியல், Essay | கட்டுரை, New Arrivals

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha

By the same Author

குற்றம் தண்டனை மரண தண்டனைஅஜ்மல் கசாப், அப்சல் குரு ஆகியோர் தூக்கிலிடப்பட்டதன் பின்னணியில் உள்ள விஷயங்கள், மரண தண்டனை கொடிய குற்றங்களுக்கு எதிரான அச்சுறுத்தும் கருவி என்பது உண்மைதானா போன்ற விவாங்கள் இதில் உள்ளன.தூக்கிலிடப்படுபவர்கள் பெரும்பாலும் அடித்தளத்தைச் சேர்ந்தவர்கள். அவர்களது மரணத்தால் துன்புற..
₹95 ₹100
காந்தியும் தமிழ்ச் சனாதனிகளும்காந்தியும் தமிழ்ச் சனாதனிகளும் பலதரப்பு மக்களையும் ஒன்றாக இணைத்துப் பார்க்கக்கூடிய பார்வை இந்திய வரலாற்றில், குறிப்பாக சென்ற நூற்றாண்டு வரலாற்றில் காந்தியின் அளவுக்கு யாரிடமும் இல்லை. இந்தியாவை எந்த ஒரு குறிப்பிட்ட மக்களுக்கான தேசமாகவும் அவர் பார்க்க வில்லை. பல்வேறு சிற..
₹143 ₹150
கால்டு​வெலின் திராவிட ​மொழிக்குடும்பம் பற்றிய கண்டுபிடிப்பும் சிந்து சம​வெளி அகழ்வுகள் ​வெளிப்படுத்திய உண்​கைளும் ​சென்ற நூற்றாண்டில் தமிழக அரசிய​லை பாதித்த இரு முக்கிய நிகழ்ச்சிகள். இதன் மூலம் எழுச்சி ​​​கொண்ட பார்ப்பன எதிர்ப்பு அரசியலின் வீச்சில் ஓராண்டு காலம் ஓய்ந்து கிடந்த தமிழகப் பார்ப்பனர்கள் ..
₹95 ₹100
கூலி விலை லாபம்மார்க்ஸ், சாதாரண தொழிலாளர்களின் புரிதலுக்காக 1849ல் எழுதிய கட்டுரைகளின் தொகுப்பு. 165 ஆண்டுகளுக்கு முன்பு எழுதப்பட்டதுதான் என்றாலும் இன்றைக்கும் படிக்கும் எவருக்கும் புதிய தெளிவைத் தரும் ஒரு செம்பனுவல்...
₹90 ₹95