Menu
Your Cart

ஆர்.எஸ்.எஸ்: கடந்துவந்தபாதையும் செய்யவேண்டிய மாற்றங்களும்

ஆர்.எஸ்.எஸ்: கடந்துவந்தபாதையும் செய்யவேண்டிய மாற்றங்களும்
-5 %
ஆர்.எஸ்.எஸ்: கடந்துவந்தபாதையும் செய்யவேண்டிய மாற்றங்களும்
சஞ்சீவ் கேல்கர் (ஆசிரியர்)
₹428
₹450
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
தமிழில்: சாருகேசி ஆர்.எஸ்.எஸ் இயக்கத்தின் சமூக, அரசியல் வரலாற்றை விவரிக்கும் இந்தப் புத்தகம் அதன் முப்பெரும் தலைவர்களாக கேசவ் பலிராம் ஹெட்கேவர், குரு கோல்வல்கர், பாலா சாஹிப் தேவரஸ் ஆகியோரின் காலகட்டத்தை விரிவாக விவரிக்-கிறது. புத்தகத்தின் நோக்கங்கள் மூன்று. முதலாவதாக, ஆர்.எஸ்.எஸ் இயக்கம் உருவான பின்னணி, உருவாக்கியவர்களின் கனவுகள், அவர்களுடைய சித்தாந்தத்தின் பலம் போன்றவற்றை முறைப்-படி அறிமுகப்-படுத்துவது. இரண்டாவதாக, ஆர்.எஸ்.எஸ்மீது சுமத்தப்படும் சில முக்கியக் குற்றச்சாட்டுகளுக்குப் பதிலளிப்பது. காந்தியைக் கொன்றவர்கள், முஸ்லிம் விரோதிகள், பிராமண மேலாதிக்கத்தை நிலைநாட்ட முயல்-பவர்கள் என்றெல்லாம் திட்டமிட்டுப் பரப்பப்படும் செய்தி-கள் ஆதார-மற்றவை என்பதை வலுவான வாதங்கள்மூலம் இந்தப் புத்தகம் நிரூபிக்கிறது. மூன்றாவது நோக்கம், இயக்கத்தைக் கறாரான விமரிசனப் பார்வைக்கு உட்படுத்துவது. ஆர்.எஸ்.எஸ் இன்று செல்லும் பாதை சரியானதா? என்னென்ன குறைபாடுகள் அதன் வளர்ச்சியைத் தடுத்து நிறுத்துகின்றன? பலப்படுத்திக்கொள்ள இயக்கம் என்னென்ன செய்ய-வேண்டும்? என்பவை பற்றிப் பேசுகிறது. அடிப்படையில் ஒரு மருத்துவரான நூலாசிரியர் சஞ்சீவ் கேல்கர் 1967 தொடங்கி சுமார் 30 ஆண்டுக் காலம் ஆர்.எஸ்.எஸ் இயக்கத்தில் உறுப்-பின-ராக இருந்தவர். தனது ஆழ்ந்த அனுபவங்களையும் விரிவான ஆய்வையும் உள்ளடக்கி அவர் எழுதிய The Lost Years of the RSS நூலின் மொழிபெயர்ப்பு இது. ஆர்.எஸ்.எஸ் இயக்கத்தை ஏற்பவர்கள், விமரிசிப்பவர்கள், நிராகரிப்பவர்கள் மூவரும் படிக்கவேண்டிய முக்கியமான ஆவணம்.
Book Details
Book Title ஆர்.எஸ்.எஸ்: கடந்துவந்தபாதையும் செய்யவேண்டிய மாற்றங்களும் (RSS- Kadanthuvanda Paathaiyum Seiyavendiya Maatrangalum)
Author சஞ்சீவ் கேல்கர் (Sanjeev Kelkar)
ISBN 9789351351566
Publisher கிழக்கு பதிப்பகம் (Kizhakku Pathippagam)
Pages 368
Published On

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha

By the same Author