Menu
Your Cart

கியூபா: தெரிந்த பொய்களும் தெரியாத உண்மைகளும்

கியூபா: தெரிந்த பொய்களும் தெரியாத உண்மைகளும்
-10 % Out Of Stock
கியூபா: தெரிந்த பொய்களும் தெரியாத உண்மைகளும்
துரை இளமுருகு (ஆசிரியர்)
₹90
₹100
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
Out of Stock
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
1 கியூபா :வரலாறும் அதன் விடுதலைப் போர்களும் 2 கியூபப் புரட்சியின் பன்றிகள் வளைகுடா போர் 3 அணு ஆயுதப் போரும்கியூபாவும் 4 பிடல் கேஸ்ட்றோவின் சுருக்கமான வாழ்க்கைக் குறிப்பு 5 சேகுவாரவும் கியூபப் புரட்சியும் 6 கியூபா சில ஏன்கள் 7 தமிழ் தேசியமும் கியூபப் புரட்சியும் 8 கியூபாவும் தமிழர் உரிமையும் 9 பிற்சேர்க்கை முன்னுரை இன்றைய உலகம் முதலாளிதுவத்தின் சரிவையும், அது தனது அழிவை நோக்கி மேற்கொண்டுள்ள பயணத்தையும் ஒரு வேடிக்கையாய் பார்த்து கொண்டிருக்கிறது. இருபதாம் நூற்றாண்டில் உலகின் துயர்களுக்கு ஒரே தீர்வு முதலாளித்துவமே. அதன் உச்சக்கட்ட வளர்ச்சியான அமெரிக்க வல்லாதிக்கமே. உலகத்தின் காப்பாளர். தீவிர இஸ்லாமியவாதம் , தேசியஇன போராட்டம் ,பிற மக்கள்திரள் போராட்டங்கள் இவற்றில் இருந்து முதலாளித்துவத்தை காக்க கடவுளால் அனுப்பபட்ட தேவ தூதன். நமது நோக்கம் உள்ளது உள்ளபடி சொல்லுவதே. இங்கிலாந்து நாட்டின் மன்னராட்சியை ஒழித்துபாராளுமன்ற வழியிலே மக்கள் ஆட்சி அமைய வழி வகுத்த போராளி ஆளிவர் கிராம்வெல். இவருடைய முகம் வடுக்களும், பருக்களும், மருக்களும் நிறைந்தவை. ஒரு முறை இவரை ஓவியம் வரைய முடிவு செய்யப்பட்டது. ஓவியருக்கோ தயக்கம். அழகற்ற வடுபட்ட முகத்தை காட்டுவது எப்படி?. அதிகாரிகளுக்கும்அச்சம். இதை கண்ட ஆளிவர் கிராம் வெல் ஓவியரிடம் சென்று எல்லாவற்றையும் அறிந்த கொண்டார். உள்ளது உள்ளபடி காட்டுங்கள்.வடுக்கள் உள்பட. .உண்மையை ஓவியமாக்குங்கள் என்ற கட்டளை இட்டார். அழகிழந்த முகமும், கரை படியாத மணமும் கிராம்வெல்லின் ஓவியத்தில் இன்று தெரிகிறது.அமெரிக்காவும் - இலத்தின் அமெரிக்காவும் அமெரிக்கா, வட அமெரிக்கா, தென்அமெரிக்கா, இலத்தின் அமெரிக்கா ஐக்கிய நாடுகள் என்று பல வார்த்தைகள் மக்களிடையே புழக்கத்தில் உள்ளன. பொதுவாக அமெரிக்கா என்றாலே ஆப்ராகாம்லிங்கன், கென்னடி, ஜார்ஜ்புஸ் ஆகியோரை தலைவராக கொண்டநாடு, அச்சடித்த பச்சை நோட்டு டாலர்கள் குவிந்து கிடக்கும் குபேர பூமி ஐ.ஐடியில் படித்த, படித்துக்கொண்டிருக்கிற மாணவர்கள் செல்ல விரும்பும் சொர்க்க உலகம் சென்றவர்கள்தன் சொந்த நாட்டிற்கு திரும்பி வர விரும்பாத நாடு என்ற ஒரு கருத்தே மக்களிடம் உலவி வருகிறது. ஆனால் அமெரிக்கா என்பது ஒரு பெரிய நிலப்பரப்பை குறிக்கும் சொல் ஆகும். உலகை ஐந்து கண்டங்களாக மனிதன் பிரித்து இருக்கிறான். ஆசியா, ஆப்பிரிக்கா, ஐரோப்பா, ஆஸ்திரேலியா, அமெரிக்கா. எனவே அமெரிக்கா என்னும் சொல் அமெரிக்க கண்டம் முழுவதையும் குறிக்கும். .13 கோடி ஆண்டுகளுக்கு முன்னால் அமெரிக்க கண்டம் கோண்டுவானா மா கண்டத்திலிருந்து பிரிந்தது. 1.5 கோடி ஆண்டுகளுக்கு முன்னால் பூமியின் அடித்தளத்தில் உள்ள கரிப்பியன் நிலத்தகடும் பசுபிக் நிலத்தகடும் ஒன்றோடொன்று மோதியதால் பல எரிமலை வெடிப்புகள் ஏற்பட்டன. அந்த எரிமலைகள் பின்பு குளிர்ந்து தீவு தொடர்கள் ஆயின. இவ்வாறு புதிய நிலப்பகுதியின் தோன்றியது. சுமார் 30 லட்சம் ஆண்டுகளுக்கு முன்னால் வட அமெரிக்கா, தென்அமெரிக்கா இவை இரண்டையும் இணைக்கும் நிலப்பகுதி பானமா என்ற நிலப்பகுதி ஆகியவற்றை கொண்ட அமெரிக்க கண்டம் தோன்றியது. 10,000 ஆண்டுகளுக்கு முன்னால் இந்த நிலப்பகுதியில் மக்கள் குடியேறத் தொடங்கினர். [1400-இன் இறுதியிலேயே அமெரிக்க கண்டம் கண்டுபிடிக்கப்பட்டது. ஆனால் அதற்கு அப்பொழுது அமெரிக்கா என்ற பெயர் இல்லை. புதிய உலகம் அல்லது இந்தியா என்றே அழைக்கப்பட்டது. முதன் முதல் அமெரிக்க என்ற பெயர் ஒரு பெரிய வரைபடத்தில் ஜெர்மன் தேசத்து வரைபட நிபுணர் மார்க்டின் வால் டெஸ் முல்லர் இதற்கு அமெரிக்கா என்று பெயர் எழுதினார். இது ஏப்ரல் 25, 1507 ஆம் ஆண்டு நடந்தது. முதன் முதலில் அமெரிக்கா என்ற பெயர் சூட்டப்பட்டது இப்படித்தான்] . மனித குலம் கிழக்கு மத்திய ஆப்பிக்க நாடுகளில் தான் முதலில் தோன்றியது. பின்பு அங்கிருந்து உலகம் முழுவதும் பரவியது என்பது இன்றைய அறிவியல் நிலையாகும். அது போன்று இந்த அமெரிக்க கண்டத்திற்குள்ளும் சுமார் பத்தாயிரம் ஆண்டுகளுக்கு முன் பெர்ரின் நில இணைப்பு (தற்போது இது கடல் பகுதியாக உள்ளது) மூலமாக, ஆசியாவின் வடக்கு பகுதியிலிருந்து ஆதி மனிதன் அமெரிக்க கண்டத்திற்குள் நுழைகிறான். பிறகு அதன் மலை சமவெளி கடற்கரை அடர்ந்த பசுங்காடுகள் ஆகியவற்றில் எல்லாம் வாழத் தொடங்கினான். அந்த இடங்களில் பல தொன்மையான நாகரிகங்கள் தோன்றி அரசு புரிந்தன. குளோவிஸ், அஸ்டக், மாயா, இங்கா ஆகியவை இவற்றில் சில. மாயா நாகரிகம் கி.மு. 250 முதல் தோன்றி இருத்தல் வேண்டும். மற்ற இரண்டும் கி.பி. 14-15 ஆம் நூற்றாண்டு வரை அரசு புரிந்தது. அமெரிக்க கண்டத்தில் உண்மையான XYZ உடைமையாளார்கள், தொல்குடிகள் இவர்களே. 1492 ஆம் ஆண்டு கிர்ஸ்டோபர் கொலம்பஸ் இந்தியாவை கண்டுபிடிக்க என்று .
Book Details
Book Title கியூபா: தெரிந்த பொய்களும் தெரியாத உண்மைகளும் (Cuba therintha poigalum theriyatha unmaigalum)
Author துரை இளமுருகு (Thurai Ilamuruku)
Publisher நுண்மை பதிப்பகம் (Nunmai Pathippagam)
Pages 119
Year 2019
Edition 1
Format Paper Back
Category History | வரலாறு, சர்வதேச அரசியல், Essay | கட்டுரை

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha