Menu
Your Cart

இந்தியா-பாகிஸ்தான் போர்கள்

இந்தியா-பாகிஸ்தான் போர்கள்
-5 %
இந்தியா-பாகிஸ்தான் போர்கள்
துவாரகை தலைவன் (ஆசிரியர்)
₹252
₹265
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
பிரிட்டனின் காலனியாதிக்கத்தை எதிர்த்தபோது சகோதரர்களாக இருந்தவர்கள் இன்று சண்டைக்காரர்களாக மாறியிருக்கும் வரலாற்றுச் சோகம் இந்தியபாகிஸ்தான் போர்களின் ஊடாக இதில் விவரிக்கப்பட்டுள்ளது. எங்கே, எப்படி, ஏன் தொடங்கியது இந்தப் பகை? இந்தக் கேள்வியை முன்வைத்து தொடங்கும் இந்தப் புத்தகம் இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான போர்கள் ஒவ்வொன்றையும் மிக விரிவான வரலாற்றுப் பின்னணியில் பொருத்தி ஆராய்கிறது.போர் நடைபெற்ற நிலப்பரப்பு, இரு தரப்பையும் சார்ந்த ராணுவ மற்றும் அரசியல் தலைமை, களமிறக்கப்பட்ட துருப்புகள், பயன்படுத்திய ஆயுதங்கள், ராணுவத் தளவாடங்கள், போர் வியூகங்கள் உள்ளிட்ட பல முக்கியமான தகவல்களை இந்தப் புத்தகம் ஆவணப்படுத்தியுள்ளது. பிரச்னையின் மையப் புள்ளியாகத் திகழும் காஷ்மிரின் அரசியலும் வரலாறும் புத்தகம் நெடுகிலும் படர்ந்திருக்கிறது. 1947ம் ஆண்டு நடைபெற்ற முதல் காஷ்மிர் யுத்தம் தொடங்கி 1999ம் ஆண்டு நடைபெற்ற கார்கில் போர் வரை ஒவ்வொரு போரும் தனிக்கவனம் கொடுத்து விவரிக்கப்பட்டுள்ளது. நூலாசிரியர் துவாரகை தலைவன் எந்தவிதச் சார்புநிலையும் எடுக்காமல் விரிவான ஆதாரங்களின் அடிப்படையில் இந்தப் போர்களை அணுகியிருப்பது இந்தப் புத்தகத்தின் தனிச்சிறப்பு.
Book Details
Book Title இந்தியா-பாகிஸ்தான் போர்கள் (India Pakistan Porgal)
Author துவாரகை தலைவன் (Thuvaarakai Thalaivan)
ISBN 9789384149895
Publisher கிழக்கு பதிப்பகம் (Kizhakku Pathippagam)
Pages 320
Year 2016

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha

By the same Author

உள்வெளிப் பறவை“படிமங்கள் ஒன்றன் பின் ஒன்றாக தொடர்ந்து வந்து ஒரு நேர்த்தி இழையோடி இருக்க, உள்ளத்தை அழுத்தமாகத் தொட்டு இயக்கும், வாழ்வியலை மையமாகக் கொண்ட முற்றிலும் புதிதான நவீனக் கவிதைகள்.” சென்னையில் வசிக்கும் பொறியாளராகிய இவரின் சொந்த ஊர் மதுரை. கடந்த பத்து வருடங்களாக எழுதி வரும் இவர் இளம் தலைமுறைக..
₹38 ₹40