Menu
Your Cart

பிம்பச் சிறை

பிம்பச் சிறை
-5 %
பிம்பச் சிறை
₹379
₹399
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹40 shipping fee* (Free shipping for orders above ₹500 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.
"எம்.ஜி.ஆர். நாற்பது ஆண்டுகாலம் தமிழ்சினிமாவை ஆண்டார். பத்து ஆண்டுகாலம் தமிழக முதலமைச்சராக நடித்தார்",என்று பாரதி கிருஷ்ணகுமார் ஒரு மேடையில் சொன்னார். எம்.ஜி.ஆர். என்ற கனவு உலகுக்குப் போய் கனவைக் கலைத்து அறிவை இழுத்து வருகிறது எம்.எஸ்.எஸ்.பாண்டியனின் சிந்தனைகள். எம்.ஜி.ஆர். இறந்த பிறகு ஆங்கிலத்தில் எழுதப்பட்ட புத்தகம். பாண்டியன் இறந்த பிறகு தமிழுக்கு வருகிறது. கனவுக்கும், அறிவுக்கும் காலம் இல்லை. ஆனால் காலத்தை அறிவு தீர்மானிக்கும். - ப.திருமாவேலன், ஆசிரியர், ஜூனியர் விகடன் கிராம்சி, இ.பி. தாம்ப்ஸன் சாபல்டரன் ஸ்டடீஸ் உள்ளிட்ட சிந்தனை களங்களின் தொடர் இழையாக பாண்டியன் மேற்கொண்ட இந்த முயற்சி இருபத்தைந்து ஆண்டுகள் கழித்தே தமிழில் வெளிவருகிறது என்றாலும் இன்றைக்கும் ஒரு வரலாற்று ஆவணமாக சிந்தனை சிறப்பாக இளைஞர்களுக்கு விளங்கும் என்பதில் ஐயமில்லை. ' - ராஜன் குறை. அம்பேத்கர் பல்கலைக்கழகம் பதவி, அதிகாரம் இவற்றிற்கு சிறிதும் மதிப்பு கொடுக்காத, அச்சமற்ற வணங்காமுடி பாண்டியன், எந்த ஒரு பிரச்சினையிலும் தனது நிலைப்பாட்டை தயக்கமின்றி வெளிப்படுத்தியவர். அவரது இத்தன்மையை இந்நூலிலும் காணலாம். "எம்.ஜி.ஆரின் 11 வருட ஆட்சிகாலம் சந்தேகமே இல்லாமல் தமிழகத்தின் சமகால வரலாற்றின் இருண்ட காலங்களில் ஒன்றாகும்" என்றெழுத மனத்திண்மை வேண்டும். நியாயம் என்று தனக்கு பட்டதற்காகப் பரிந்துப் பேசுவார். இந்திய வரலாற்றியலுக்கும் தமிழ்சினிமா வரலாற்றிற்கும் முற்போக்கு சிந்தனையாளர் பாண்டியனின் முக்கியப் பங்களிப்பு இந்நூல்.
Book Details
Book Title பிம்பச் சிறை (Bimbachchirai)
Author எம்.எஸ்.எஸ்.பாண்டியன் (M.S.S.Pandian)
ISBN 9788193076446
Publisher பிரக்ஞை (Pragnai)
Pages 248
Year 2016
Category TamilNadu Politics | தமிழக அரசியல்

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha

By the same Author

1997-&1999 ஆண்டுகளில் எம்.எஸ்.எஸ். பாண்டியனின் மூன்று கட்டுரைகள் காலச்சுவடில் வெளிவந்தன. அத்தோடு அவருடைய முதல் ஆங்கில நூலின் அறிமுகமும் அவரை ஆசிரிய ராகக் கொண்டு வெளிவந்த ‘South Indian Studies’ இதழ் அறிமுகமும் காலச்சுவடில் பிரசுரமாயின. இவற்றின் தொகுப்பு இந்நூல். முன்னுரை கே. சந்துரு. கண்ணனின் நினை..
₹95 ₹100