-5 %
யுவான்சுவாங் இந்தியப் பயணம் (மூன்று பாகங்கள்)
Categories:
Translation | மொழிபெயர்ப்பு ,
Tourism - Travel | சுற்றுலா - பயணம் ,
Travelogue | பயணக்குறிப்பு
₹665
₹700
- Year: 2020
- Language: தமிழ்
- Publisher: சந்தியா பதிப்பகம்
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
பொன். சின்னத்தம்பி முருகேசன் தமிழில் ஒரு மிகச்சிறந்த மொழிபெயர்ப்பாளர். 2004ல் வெளிவந்த இவரது முதல் மொழிபெயர்ப்பு நூலான 'இயற்பியலின் தாவோ' தமிழ் வளர்ச்சித் துறையின் பரிசு பெற்றது. இவரது மூன்று ஆண்டு கால தீவிர மொழிபெயர்ப்பு பணியின் விளைவாக இந்த மூன்றாம் தொகுதியுடன் யுவான்சுவாங் இந்தியப் பயணம் தமிழில் முழுமை பெறுகிறது. இது ஒரு இமாலய சாதனை.
புனிதப் பயணியருள் பௌத்த சமயத்தின்பால் தீராத பற்றுக்கொண்ட கன்ஃபூசியனிச சிந்தனை மரபு வழித்தோன்றலான யுவான்சுவாங்கின் இந்தியப் பயணம் பற்றிய குறிப்புகள் பேரார்வத்தைத் தூண்டக்கூடியவை. யுவான்சுவாங் சுமார் பதினாறு ஆண்டுகாலம் பயணம் செய்து தான் நேரில் கண்டவற்றையும் கேள்விப்பட்டவற்றையும் அக்கால சீனப்பேரரசர் தாங் வேண்டுகோளுக்கேற்ப சீனமொழியில் இயற்றிய பயண நூலினை தாமஸ் வாட்டெர்ஸ் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துள்ளார். யுவான்சுவாங் பயணக் குறிப்புகளுக்கு இணையாக ஆங்கில மொழிபெயர்ப்பாளிரின் ஆய்வுரைகள் இன்றியமையாதவை. இரண்டையும் உள்ளடக்கமாகப் பெற்ற நூல் தமிழிலும் வரவேண்டும் என்று எழுந்த பேரவாவின் துவக்கமாக ஆங்கில நூலின் ஒருபகுதி தமிழில் முதல் தொகுதியாக உங்கள் கைகளில்.
முந்தைய தொகுதியில் அண்டை நாட்டுப் புனிதப் பயணியாக நுழைந்த யுவான் சுவாங் இத்தொகுதியில் இந்தியராகவே மாறிவிட்ட நிலையைக் காணலாம்.
உதயனா, தக்ஷ்சீலா, காஷ்மீர், ராஜபுரம், மதுரா, அயோத்தியா, பிரயாகை, சிரவஸ்தி போன்ற தற்கால இந்தியப் பகுதிகளெல்லாம் தனித்தனி நாடுகளாகக் கோலோச்சிய காலத்தில் தான் கொண்ட சமயப்பற்றால் உந்தப்பட்டு அளவிறந்த இன்னல்களுக்கும் இடர்பாடுகளுக்கும் இடையே அயர்வறியாது தொடரும் யுவான் சுவாங் இந்தியப் பயணம் வியப்பளிப்பதுடன் ஆர்வமூட்டக்கூடியதாகவும் இருக்கிறது.
Book Details | |
Book Title | யுவான்சுவாங் இந்தியப் பயணம் (மூன்று பாகங்கள்) (xuanzang-india-payanam-moondru-paakangal) |
Author | யுவான் சுவாங் (Yuvaan Suvaang) |
Translator | பொன். சின்னத்தம்பி முருகேசன் (Pon Chinathambi Murugesan) |
Publisher | சந்தியா பதிப்பகம் (santhiya pathipagam) |
Pages | 0 |
Year | 2020 |
Category | Translation | மொழிபெயர்ப்பு, Tourism - Travel | சுற்றுலா - பயணம், Travelogue | பயணக்குறிப்பு |