Menu
Your Cart

கீழடியில் கேட்ட தாலாட்டுகள்

கீழடியில் கேட்ட தாலாட்டுகள்
-5 %
கீழடியில் கேட்ட தாலாட்டுகள்
ஈரோடு தமிழன்பன் (ஆசிரியர்)
₹219
₹230
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
கபடி ருத்தரிக்கும் காவிய நேரம் முரசொலியில் படித்தேன். படித்தவுடனே மகிழ்ச்சியாக இருந்தது, காரணம், அந்தக் கருத்தரிக்கும் காவிய நேரம் தலைப்பு புதிதாக இருக்கிறது. வித்தியாசமாக இருக்கிறது. கவர்ச்சியாகவும் இருக்கிறது. உள்ளே பார்த்தாலும் சாதாரண விஷயமில்லை, ஒரு வரலாற்று நிகழ்வைக் கவிதை வடிவில் உணர்வாகச் சொல்லியிருக்கிறார். மகிழ்ச்சியாக இருக்கிறது. இவர் எழுதியிருப்பதைப் பார்க்கும்போது இந்தக் கவிதையில் இருக்கும் எந்தச் சொல்லையும் மாற்ற முடியாது. கவிஞர் என்கிற முறையில் ஆழமான கருத்துகளைப் பதிவு செய்திருக்கிறார். ஏற்கெனவே மதுரைப் பக்கத்தில் ஆதிச்சநல்லூர் ஆராய்ச்சி நடந்திருக்கிறது. இப்போது சிவகங்கைப் பக்கத்தில் கீழடி ஆய்வுகளெல்லாம் நமது பழைமையான நாகரிகத்தைக் காட்டுகின்றன. தமிழ்நாட்டில் அங்கங்கே நம் வரலாறு கல்வெட்டுகளில் காணப்படுகிறது. கல்வெட்டென்பது கல்வெட்டாக இல்லாமல் வரலாறாக இருக்கிறது. அந்த வரலாறைக் கவிதையாகத் தமிழனின் பெருமையை எழுதியிருப்பது ஒரு நல்ல கவிஞருக்கு எடுத்துக்காட்டு. எழுதிய கவிதைகள் சொந்த வாழ்க்கையில் அனுபவிப்பதைப்போல இருப்பது இந்தக் கவிதையின் சிறப்பு. ஏற்கெனவே பாப்லோ நெருதாவின் கவிதைகளையும் மற்ற வெளிநாட்டுக் கவிஞர்களின் கவிதைகளையும் தமிழில் அறிமுகம் செய்ததும் பாராட்டுக்குரியது என எல்லோரும் பாராட்டினார்கள். மறைந்து போன தமிழனின் வரலாற்றைக் கவிதைகளில் காட்டுகிறார். தமிழனின் பெருமையைக் கவி வளத்தால் காட்டியது பாராட்டுக்குரியது. அந்த அளவிற்கு இனிமையாக இருக்கிறது.
Book Details
Book Title கீழடியில் கேட்ட தாலாட்டுகள் (kizhadiyil ketta thalattu)
Author ஈரோடு தமிழன்பன் (Erode Thamizhanban)
Publisher பூம்புகார் பதிப்பகம் (Poombukar Pathipagam)
Pages 224
Published On Apr 2022
Year 2022
Edition 1
Format Paper Back
Category Archeology | தொல்லியல், Poetry | கவிதை, 2022 New Arrivals | 2022 புதிய வெளியீடுகள்

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha

By the same Author

தத்து பித்துவம்“தமிழ்ப்பண்பாட்டு மரபின் சக்தி வாய்ந்த தொடர்ச்சியாக, உலக நவீனத்துவக் கவிதைகளுக்குப் பங்களிப்புச் செய்து வரும் நம்கால சமநிலைக் கவிஞர்களுள் முதல் நிலைக் கவிஞர் தமிழன்பன்”.-கா.சிவத்தம்பி“மகாகவி பாரதிக்குப்பிறகு தமிழ்க்கவிதை அவ்வளவாக வளர்ந்து விடவில்லை என்றுதான் நான் கருதிக்கொண்டிருந்தேன்..
₹57 ₹60