Menu
Your Cart

பூத்த கரிசல்

பூத்த கரிசல்
-5 %
பூத்த கரிசல்
சி.முருகன் இ.ஆ.ப (ஆசிரியர்)
₹190
₹200
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
பூத்த_கரிசல் தெக்கத்தி மண்ணின் இலக்கிய ஆவணம். தமிழ்நிலக் கரிசல் வட்டார மக்களின் சமூக வாழ்வியலை விவரிக்கும் 'பூத்த கரிசல்' சிறுகதைகள், கரிசலின் வைப்பாற்றங்கரைச் சமூகப் பண்பாட்டு வரைவியலாய் மலர்ந்திருக்கிறது. இக்கதைகள் யாவும் எளிய மக்களின் வாழ்வியலையும், மனக் கோலங்களையும், நுண் உணர்வுகளையும், உள் முரண்களையும், மனித உறவுகளையும் மிக அழகாய் எடுத்துரைக்கின்றன. கதைகள் வழியிலான சமூக ஆவணமாய் மலர்ந்திருக்கும் பூத்த கரிசல் நூலானது, தமிழ் இலக்கிய உலகில் மணம் பரப்பியும், கரிசல் வட்டார இலக்கிய மரபை வளப்படுத்தும் பாங்கிலும் உயிர்ப்பைக் கொண்டிருக்கிறது. விதைகள் தூங்கினாலும் உள்ளேயிருக்கும் பெருமரத்தின் உயிர்மம் தூங்காது. அதைப்போல, ஐ.ஏ.எஸ் அதிகாரி எனும் அரசுப் பணிகள் நிமித்தமாக ஓடிக்கொண்டே இருந்தாலும், தனக்குள் புதைந்து கிடக்கும் படைப்பாக்கத்தைக் கதை சொல்லல் முறையில் வெளிப்படுத்தி,'பூத்த கரிசல்' மூலம் எழுத்துலகத்துக்கு அறிமுகமாகும் சி.முருகன் அவர்கள், தனித்துவமாய் மிளிர்வார்; வளர்வார் எனும் நம்பிக்கையை இந்தக் கதைகள் தந்திருக்கின்றன.
Book Details
Book Title பூத்த கரிசல் (Pootha Karisal)
Author சி.முருகன் இ.ஆ.ப
ISBN 9788196340087
Publisher யாப்பு வெளியீடு (Yaappu Veliyeedu)
Pages 200
Year 2024
Edition 1
Format Paper Back
Category Short Stories | சிறுகதைகள், 2024 New Releases

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha