- Edition: 1
- Year: 2016
- ISBN: 9789384301576
- Page: 160
- Format: Paper Back
- Language: Tamil
- Publisher: டிஸ்கவரி புக் பேலஸ்
பிரபஞ்சன் கட்டுரைகள்
உலகமயமாக்கல் காலகட்டத்தில், எல்லாம் நுகர்பொருள் பண்பாடாகஉருமாற்றமடையும் சூழலில், அசலான சுய சிந்தனை இல்லாமல் போகிறது. பின் -காலனியச் சூழலில் வாழ நேர்ந்திட்ட நம் மனநிலை, மேலைநாடுகள்மேன்மையானவை என்ற புனைவுக்குள் சிக்கித் தவிக்கின்றது. ஊடகங்கள்தொடர்ந்து நிகழ்த்தும் புனைவு வெளியில், ‘நகல்களின் உண்மை’யில் வாழப்பழகிக் கொண்டிருக்கிறோம். பாரம்பரியமான தமிழ் மொழியைப் பேசும் புராதனத்தமிழர், மெல்ல அடையாளமிழக்கும் நிலை உருவாகிக் கொண்டிருக்கிறது.இந்நிலையில் பண்டை இலக்கியமான சங்க இலக்கியத்தை முன்வைத்துப்பிரபஞ்சன் முன்னிறுத்தும் சொற்கள், நம்மை யோசிக்கத் தூண்டுகின்றன.பண்டிதர்கள்போல் போலிப் பெருமை பேசுவது பிரபஞ்சனின் நோக்கமல்ல.எல்லாம் வணிகமயமாகிச் சுற்றுச்சூழலும் நாசமாகிப்போன தமிழகத்தில், சங்கஇலக்கியம் முன்வைத்துள்ள ஐந்திணை வாழ்க்கையைப் பரிசீலித்து , பூமிமீதான,நம் ஈர்ப்பை வலுப்படுத்துகிறார்.
- ந.முருகேசபாண்டியன்
Book Details | |
Book Title | பிரபஞ்சன் கட்டுரைகள் (Prabanjan Katturaikal) |
Author | பிரபஞ்சன் (Prapanjan) |
ISBN | 9789384301576 |
Publisher | டிஸ்கவரி புக் பேலஸ் (Discovery Book Palace) |
Pages | 160 |
Year | 2016 |
Edition | 1 |
Format | Paper Back |