
-5 %
Out Of Stock
பிரபஞ்சன் மகாபாரதம்
பிரபஞ்சன் (ஆசிரியர்)
₹333
₹350
- Year: 2014
- ISBN: 9789382648888
- Page: 344
- Language: தமிழ்
- Publisher: நற்றிணை பதிப்பகம்
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
Out of Stock
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
உலகம் இதுவரை காணாத பேரிதிகாசத்தை உருவாக்கிய கிருஷ்ண துவைபாயனர் என்ற இயற்பெயர் கொண்ட வியாசர், மகாபாரதத்தில் மனிதர்களின் அனைத்து முகங்களையும் - உள்முகங்களை - வரைந்து காட்டியுள்ளார். சகுனி ஒவ்வொரு முறையும் காயை உருட்டும்போதும், தருமன் தோற்றானா என்று பேராவலுடன் கேட்கிற திருதராஷ்டிரன் அவருடைய மகன். குலநாசத்துக்குக் காரணமாகிற துரியோதனனைத் தியாகம் செய், சிறைப்படுத்து, நாடு கடத்து என்று அறம் சொல்கிற விதுரனும் அவர் மகன். இருவரின் மேலும் அவருக்குப் பட்சமும் இல்லை. பாதகமும் இல்லை. அவர்கள் யாரோ, அவர்களின் உள்ளங்கை ரேகையோடு, அவர்களின் இதயம் எப்படித் துடிக்கிறதோ அதை அப்படியே சொல்வதே வியாச லட்சணம். இன்னும் ஆழ்ந்து போனால், இந்தக் கதை, இந்த மனிதர்கள், எல்லாமும் அவருக்கு வெறும் உபகரணங்கள்தான். அவரிடம் ஆழ்ந்திருக்கும் கவி உள்ளமும், தத்துவ ஞானமும், அவர் கட்டமைக்கும் தர்மங் களும், புறக்கணிக்கும் பழைமையும், புதுசாக உருவாக்கும் வாழ்க்கைத் தர்மங்களுமே நாம் நுணுகிக் கற்கத்தக்கவை. - பிரபஞ்சன்
Book Details | |
Book Title | பிரபஞ்சன் மகாபாரதம் (Pirapanjan Mahabharatham) |
Author | பிரபஞ்சன் (Prapanjan) |
ISBN | 9789382648888 |
Publisher | நற்றிணை பதிப்பகம் (Natrinai Publications) |
Pages | 344 |
Year | 2014 |
Category | Novel | நாவல், Hindu | இந்து மதம் |