
- Edition: 1
- Year: 2016
- ISBN: 9789382648130
- Page: 224
- Format: Paper Back
- Language: Tamil
- Publisher: நற்றிணை பதிப்பகம்
தபால்காரர் பெண்டாட்டி
தபால்காரர்கள் மேல் என்ன காரணத்தாலோ ஒரு வகையான ஈர்ப்பு சின்ன வயசிலிருந்தே எனக்கு ஏற்பட்டுவிட்டது. தபால்காரர்களை நான் தினமும் சந்திக்கும் வாய்ப்பு ஏற்பட்டது. எங்கள் வீட்டுக்கு தினமும் தபால் வரும்.
அப்படித்தான் பரிச்சயமானவர் அந்தத் தபால்காரர். சைக்கிளில் வருவார். நான் பத்திரிகைகளுக்கு பதின்மூன்று வயது தொடங்கி சின்னச் சின்னக் கவிதைகள் அனுப்பிவைப்பேன். அவை திரும்பி வரும். அல்லது பிரசுரிக்க இயலாமைக்கு வருந்துவதாக ஆசிரியர் எழுதி இருப்பார்.
ஆனால் விரைவில், என் கதை, கவிதை, கட்டுரைகள் பிரசுர மாயின. அவர், என் பக்கத்திலிருந்து, நான் பத்திரிகையைப் பிரித்து, பிரசுரமாகி இருக்கும் என் படைப்பை நானும் படித்து, அவரிடமும் காட்டும் வரை, அவர் என் எதிரிலேயே நின்றிருப்- பார். வாய் திறந்து பாராட்டமாட்டார். ஆனால், அவர் மகிழ்ச்சி யாக உணர்கிறார் என்பதை நான் அறியும்படி இருக்கும்.
- பிரபஞ்சன்
Book Details | |
Book Title | தபால்காரர் பெண்டாட்டி (Thabaalkaarar Pondati) |
Author | பிரபஞ்சன் (Prapanjan) |
ISBN | 9789382648130 |
Publisher | நற்றிணை (Natrinai) |
Pages | 224 |
Year | 2016 |
Edition | 1 |
Format | Paper Back |