Menu
Your Cart

அன்று சிந்திய ரத்தம்

அன்று சிந்திய ரத்தம்
-5 % Out Of Stock
அன்று சிந்திய ரத்தம்
சாத்திரி (ஆசிரியர்)
₹124
₹130
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
Out of Stock
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
"அன்று சிந்திய ரத்தம்" வரலாற்றுக் குறிப்புக்களின் தொகுப்பு. ஏப்ரல் 2000இல் ஆனையிறவு கைப்பற்றப்பட்டதில் தொடங்கி முள்ளிவாய்க்கால் சோகத்தோடு நிறைவுபெறுகிறது. மிகச் சிறிய நூலானாலும் பல அரிய தகவல்களை அளித்திருக்கிறார் சாத்திரியார். சுவை, விறுவிறுப்பு, புரட்டத் தொடங்கிவிட்டால் 'மூட மனம் ஒப்பாது. அடுத்து என்ன, அடுத்து என்ன, என்று வாசகனின் ஆவலைத் தூண்டுவதாகவே ஒவ்வொரு பகுதியினையும் அமைத்துள்ளது சாத்திரியின் தனிச் சிறப்பு. எனக்குத் தெரிந்த வரையில், நான் விசாரித்தறிந்து வரையில், சாத்திரி வெளிப்படுத்தும் செய்திகள் நம்பகமானவையே. இந்நூலின் இன்னொரு சிறப்பம்சம், சற்றும் காழ்ப்புணர்வின்றி நிகழ்வுகளை நினைவுகூர்கிறார் ஆசிரியர் என்பது. 'ஈழப் போராட்ட வரலாற்றுக்கு, அதனைப் பற்றிய சரியான புரிதலுக்கு அன்று சிந்திய ரத்தம்' குறிப்பிடத்தக்கதோர் பங்களிப்பு. த.நா. கோபாலன், பத்திரிகையாளர்'சாத்திரி என்றால் சோதிடர் என்று சொல்வார்கள். இந்தச் சாத்திரி சோதிடர் அல்ல; படைப்பாளி, கலகக்காரன். தனது பள்ளிப் பருவத்திலேயே விடுதலைப் புலிகள் அமைப்பில் இணைந்து செயற்பட்ட அந்த அமைப்பின் உறுப்பினர்; ஈழப்போராளி. தற்போது புலம்பெயர்ந்து ஐரோப்பாவில் - பிரான்ஸில் வாழ்கின்ற அகதி. ஒரு காலம் தான் பிரதிநிதித்துவம் செய்த அமைப்புக்காகவே எதையும் செய்த, எல்லாவற்றையும் செய்ய முனைந்த சாத்திரி இப்பொழுது அவற்றையெல்லாம் மீளாய்வு செய்து கொண்டிருக்கிறார். கருணாகரன், ஈழக் கவிஞர்.
Book Details
Book Title அன்று சிந்திய ரத்தம் (Andru sinthiya ratham)
Author சாத்திரி (Saaththiri)
ISBN 978-93-83986-16-3
Publisher புதிய தலைமுறை (Puthiya Thalaimurai)
Pages 144
Published On Jan 2016
Year 2016
Edition 1
Format Paper Back
Category History | வரலாறு, Biography | வாழ்க்கை வரலாறு, Eezham | ஈழம்

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha

By the same Author

இந்தக் கதைகளை ஊன்றிக் கவனித்தால், இவற்றில் ஒரு வரலாற்று அடையாளத்தைக் காண முடியும். அதேவேளை ஒருகாலகட்டத்தின் முகத்தையும் உணரலாம். சாத்திரி போராளியாகவும் தனித்தும் உலாவிய இடங்களின் தடங்கள் தெரிகின்றன. அதில் ஒளியும் இருளும் உண்டு. இவையெல்லாம் இணைந்து புனைவாகவும் நிஜமாகவும் இணைந்திருக்கின்றன. மறுவளமாகச்..
₹171 ₹180