
-5 %
புதிய வெளிச்சத்தில் தமிழ் இலக்கிய வரலாறு
க.பஞ்சாங்கம் (ஆசிரியர்)
₹238
₹250
- Year: 2017
- Page: 414
- Language: தமிழ்
- Publisher: அன்னம் - அகரம் வெளியீட்டகம்
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
இலக்கிய, இலக்கணங்கள் என்பவை சமூகத்தை, மனித மனங்களைக் கட்டமைக்கும் ஒரு அதிகார நிறுவனமாக வரலாற்றில் இயங்குகின்றன. இந்தப் பின்னணியில் தமிழ் இலக்கிய இலக் கணங்கள் அரசு, சாதி, சமயம், ஆணாதிக்கம் முதலிய பல்வேறு அதிகாரக் கட்டமைப்புகளின் பகுதியாகவும் இவற்றுக்கு எதிர்நிலையிலும் எவ்வாறு செயல்பட்டிருக்கின்றன என்பதை நுட்பமாக எடுத்துரைக்கிறது க.பஞ்சாங்கத்தின் ‘புதிய வெளிச்சத்தில் தமிழ் இலக்கிய வரலாறு’. ஒவ்வொரு இலக்கிய வகைமைப் போக்குக்கும் பின்புலங்களுடனும் திறனாய்வுடனும் இந்நூல் அமைந்திருக்கிறது. திறனாய்வு நோக்கில் விரிவாக எழுதப்பட்ட முதன்மையான இலக்கிய வரலாறு என்றும் இதைக் கூற முடியும். எந்த ஒரு இலக்கியத்தையும் இன்றைய சமகாலப் பார்வை யுடனும் நவீனக் கோட்பாட்டுப் பார்வையுடனும் இணைத்து இன்றைக் கான இலக்கியமாக மாற்றி வாசிக்கும் பார்வை இந்நூலின் சிறந்த அம்சங்களில் ஒன்று. சிலப்பதிகாரம், சங்க இலக்கியங்களை திராவிட, தமிழ் தேசியக் கட்சிகள் சமகாலத்துக்கு இடம்பெயர்த்த பின்னணியையும் இந்த நோக்கில் விளக்குகிறது. இன்று மார்க்சியம், பின்நவீனத்துவம், பெண்ணியம், தலித்தியம், புலம்பெயர் இலக்கியம், வட்டார இலக்கியம், திருநங்கைகள் எழுத்து, மின்னூடக இலக்கியம் என்று பல்வேறு போக்குகளில் கவிதை, சிறுகதை, நாவல், நாடகங்கள் வளர்ச்சியடைந்து மனித விடுதலை அரசியலை முன்னெடுப்பதன் முக்கியத்துவத்தை விவாதிக் கும் இலக்கிய வரலாற்று நூல் இது. - க. ஜவகர்
Book Details | |
Book Title | புதிய வெளிச்சத்தில் தமிழ் இலக்கிய வரலாறு (Puthiya Velichatthil Thamizh Ilakkiya Varalaaru) |
Author | க.பஞ்சாங்கம் (Ka.Panjaangam) |
Publisher | அன்னம் (Annam) |
Pages | 414 |
Year | 2017 |