-5 %
புயலிலே ஒரு தோணி
ப.சிங்காரம் (ஆசிரியர்)
₹333
₹350
- Year: 2016
- ISBN: 9789352440337
- Page: 296
- Language: தமிழ்
- Publisher: காலச்சுவடு பதிப்பகம்
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
ப. சிங்காரத்தின் ‘புயலிலே ஒரு தோணி’ நாவல் நவீன தமிழ் இலக்கிய வரலாற்றில் இரண்டு நிலையில் முன்னோடித்தன்மைகள் கொண்டது. ஓர் இலக்கிய ஆளுமையாக ஒருபோதும் தன்னை காட்டிக்கொண்டிராத ஒருவர் எழுதிய முன் உதாரணம் இல்லாத படைப்பு இந்த நாவல். வெளிவந்து பல ஆண்டுகள் வாசகர் கவனத்திற்கு வராமல் இருந்தும் இன்று தமிழ் செவ்வியல் படைப்புகளில் ஒன்றாகக் கருதப்படுகிறது. காரணம் அதன் படைப்பு வலு. ஒரு படைப்பு தனது கலைத் திட்பத்தின் மூலமே தன்னை முன்னிறுத்திக் கொள்ளும் என்பதற்கு இது எடுத்துக்காட்டு. இது இலக்கியம் சார்ந்த முக்கியத்துவம். வரலாற்று அடிப்படையிலும் ‘புயலிலே ஒரு தோணி’ தனி இடத்தைப் பெறுகிறது. இரண்டாம் உலகப் போரின் பின்னணியையும் போர்க்கள அனுபவங்களையும் துல்லியமாகவும் நம்பகமாகவும் சித்தரித்த நாவல் இது மட்டுமே. புதிய களத்தையும், காணாத காலத்தையும், அறியாத மனிதர்களையும் தமிழ் வாசகனுக்கு நெருக்கமாக்கியதில் அபார வெற்றி பெற்ற படைப்பு ‘புயலிலே ஒரு தோணி’. ஹார்வர்டு பல்கலைக்கழக வரலாற்றுத் துறை பேராசிரியர், வங்கக் கடற்கரைக் குடியேற்றங்களை ஆராய்ந்து வரும் சுனில் அம்ரித்தின் முன்னுரையுடன் கூடிய பதிப்பு இது.
Book Details | |
Book Title | புயலிலே ஒரு தோணி (Puyalilae Oru Thoni Kalachuvadu Pathippagam) |
Author | ப.சிங்காரம் (P. Singaram) |
ISBN | 97899352440337 |
Publisher | காலச்சுவடு பதிப்பகம் (Kalachuvadu Publications) |
Pages | 296 |
Year | 2016 |
Category | Novel | நாவல் |