இந்தப் புதினம், எமர்ஜென்சி என்ற நெருக்கடி நிலைக் காலத்தின் வரலாறு அல்ல. எமர்ஜென்சியின்போது நிகழ்கிற சம்பவங்களின், புனைவு பொதிந்த தொகுதி. வாழ்க்கையை ஓரளவு பிரதிபலித்து அதில் வண்ணம் கலக்க ஒரு முயற்சி, இந்தச் சிதறுண்ட கதை கூறுதல். ஒரு தளத்தில், இவை பார்வைப் பதிவுகளின் சங்கிலிப் பின்னலும் கூட. இரா.மு..
₹428 ₹450
போன மாதம் புதுதில்லி ஜவஹர்லால் நேரு யூனிவர்சிடி மாணவர்கள் அறுபது பேரை உள்நாட்டுப் பாதுகாப்புச் சட்டம் (Maintenance of Internal Security Act – MISA) மிசாவில் கைது செய்து உள்ளே தள்ளிவிட்டதாக குல்கர்னி சொன்னது நினைவு வந்தது. நேரு பெயரில் பல்கலைக்கழகம் இருந்தாலும் மார்க்சிஸ்டுகளின் கூடாரமாம் அது. அந்த அ..
₹532 ₹560
தெருவில் சிறு பையன்களும், முட்டாக்கை எடுத்து விட்டபடி ஒரு கிழவியும், நாலைந்து நடு வயசுப் பெண்களும் ஆட ஆரம்பித்திருந்தார்கள்.
சீராகக் கைதட்டு ஒலித்துக் கொண்டிருந்த தெரு நடுவில் வைத்தாஸும் ஆட ஆரம்பித்தான். மேலே படிந்து சிதறும் ஆலங்கட்டிகளை விலக்காமல் ஆடினான் அவன்.
அவன் ஆடுவதால் அவனாக இருக்கிறான். ..
₹542 ₹570
அரசூர் வம்சம் தொடங்கி வைத்த ஒரு பிரம்மாண்டமான மாய யதார்த்த உலகம் இந்தப் புத்தகத்தில் மேலும் விரிவடைந்து நம்மை உள்ளிழுத்துக்கொள்கிறது. எது இயல்பு, எது அசாதாரணம்? இந்த இரண்டையும் வேறுபடுத்திக் காட்டுவது அவ்வளவு சுலபமல்ல. வாழ்க்கையிலேயே இது சாத்திய-மில்லாதபோது ஒரு நாவலில் எதற்காக இந்த இரண்டையும் வேறுபட..
₹380 ₹400
காலம், இராமனுடைய அம்பு அல்ல. திரும்பி வந்து அம்பறாத்தூணியில் தூங்கும் பழக்கம் அதற்குக் கிடையாது. ஓயாது முன்னே சென்று கொண்டிருக்கும் அதைத் தடுக்கவோ, அல்லது வேகத்தடை செய்யவோ மனிதனால் இன்னும் முடியவில்லை. இலக்கியத்திலாவது காலத்தை நிறுத்தி, தட்டி, ஒடுக்கி, முன்னும் பின்னும் ஓடச் செய்ய, காலம் காலமாகப் பட..
₹475 ₹500
அரசூர் பற்றி எழுது.
முன்னோர்கள் சொன்னார்கள்.
அவர்கள் என் மேசையில் ஓரங்களில் புகை போல் ஒட்டிப் படிந்து சூழ்ந்தார்கள். என் கம்ப்யூட்டர் திரையில் பனியாகப் படர்ந்து மறைத்தார்கள். காப்பிக் கோப்பையிலும் அவர்களின் வாடை.
அது புகையிலை வாடை. வீபூதி வாடை. மஞ்சள் வாடை. தூரத்துணி வாடை. பெரிய கங்காளங்களில் சோறு ப..
₹570 ₹600
‘மாடியிலே கடை போடலாமா?’ ரங்கம்மா அப்படிச் சொன்ன அடுத்து விநாடி மாடியில் ஏதோ தடதடவென்று தரையில் உருளும் சத்தம். ரங்கம்மா கலவரப்பட்டுப் போனாள்.
‘என்ன சத்தங்க அது?' ‘ஒண்ணுமில்லே... நீ சொன்னது பெரியாத்தாவுக்கு பிடிக்கலே.' சென்னகேசவன் சாதாரணமாகச் சொன்னபடி மாடியைப் பார்த்தான். ‘அது ஏதோ சின்னப்புள்ளே தெரிய..
₹893 ₹940
ரஞ்சனா ஆடிக்கொண்டிருக்கிறாள். கடமை கருதிச் சிரிக்கிற உதடுகளும் காண்டாக்ட் லென்ஸ் பொருத்திய கண்களில் முடிந்தவரை பிரதிபலிக்கும் சிங்காரமுமாக.
யாரோ ஒரு மொஹபத்ரா சட்டை இல்லாமல் தரையில் உட்கார்ந்து, மத்தளத்தைத் தட்டித் தட்டி வெறியேற்றிக் கொண்டிருக்கிறான்.
நான்தான் பாட்டுக்காரன். சூரிய உதயத்தில் தாமரைகள் ..
₹504 ₹530
ஆங்கிலத்திலும் பிற மொழிகளிலும் உள்ளதைப் போல் நெஞ்சையள்ளும் குறு-நாவல்கள் தமிழில் இருந்தால் எப்படி இருக்கும்? ஒரு தென்றலைப் போல் இனிமையாகவும் எளிமையாகவும் ஒரு குறுநாவல் நம்மைத் தீண்டினால் எப்படி இருக்கும்? நீண்ட சிறுகதைகளும் நீளம் குறைவான நாவல்களும் கிடைக்கும் அளவுக்கு நல்ல குறுநாவல்கள் தமிழில் வாசிக..
₹238 ₹250
இரா. முருகன், தமிழின் நிகழ்கால நம்பிக்கைகளுள் ஒருவர். கணத்துக்குக் கணம் தன் இயல்பையும் சொரூபத்தையும் மாற்றி மாற்றி, கண்ணாமூச்சி காட்டும் வாழ்க்கையை அதன் காட்சி மாற்றத்துக்குச் சமமான வேகத்தில் இயங்கும் மொழியில் வசப்படுத்திக் கதை களக்குபவர். அசாத்தியமான காலப் பிரமாணம். அபூர்வமான சொல்லாட்சி, முருகனின்..
₹57 ₹60