
-5 %
Out Of Stock
அச்சுதம் கேசவம்
இரா.முருகன் (ஆசிரியர்)
₹380
₹400
- Year: 2015
- ISBN: 9789384149529
- Page: 384
- Language: தமிழ்
- Publisher: கிழக்கு பதிப்பகம்
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
Out of Stock
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
அரசூர் வம்சம் தொடங்கி வைத்த ஒரு பிரம்மாண்டமான மாய யதார்த்த உலகம் இந்தப் புத்தகத்தில் மேலும் விரிவடைந்து நம்மை உள்ளிழுத்துக்கொள்கிறது. எது இயல்பு, எது அசாதாரணம்? இந்த இரண்டையும் வேறுபடுத்திக் காட்டுவது அவ்வளவு சுலபமல்ல. வாழ்க்கையிலேயே இது சாத்திய-மில்லாதபோது ஒரு நாவலில் எதற்காக இந்த இரண்டையும் வேறுபடுத்திக் காட்டவேண்டும்? ஒரு மாறுதலுக்கு, நிஜத்தையும் அதைவிடவும் சுவையான கற்பனையையும் ஒன்றோடொன்று கலக்க-விட்டால் என்னாகும்? இரண்டும் ஒன்றையொன்று சந்தித்துக்கொள்ளும்போது என்ன நடக்கும்? இரா. முருகனின் இந்தப் புதிய நாவலில் கனவும் நனவும், நிஜமும் கற்பனையும், சாதாரணமும் அசாதாரணமும் பின்னிப் பிணைந்துள்ளன. பரவசமளிக்கும், பயமூட்டும் ஒரு புதிய அனு-பவத்தை அளிக்கும் அச்சுதம் கேசவம் நாவலைத் தனியொரு பாகமாகவும் அணுகலாம்; அரசூர் வம்சத்தின் தொடர்ச்சியாகவும் பொருத்திக்-கொள்ளலாம். தமிழ்ப் படைப்புலகம் இந்நாவலை நீண்டகாலத்துக்கு விவாதிக்கப்போகிறது. அதைவிடவும் நீண்ட காலத்துக்கு நம் நினைவுகளில் இது நிறைந்திருக்கப்போவது உறுதி.
Book Details | |
Book Title | அச்சுதம் கேசவம் (Achchutham Kesavam) |
Author | இரா.முருகன் (R.Murugan) |
ISBN | 9789384149529 |
Publisher | கிழக்கு பதிப்பகம் (Kizhakku Pathippagam) |
Pages | 384 |
Year | 2015 |