
-4 %
Out Of Stock
லாலு
ஆர்.முத்துக்குமார் (ஆசிரியர்)
₹48
₹50
- Year: 2005
- ISBN: 9788183681056
- Page: 80
- Language: தமிழ்
- Publisher: கிழக்கு பதிப்பகம்
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
Out of Stock
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
மாட்டுத்தீவன ஊழல் வழக்கு என்ன ஆனது? படிப்பறிவற்ற ரப்ரி தேவியை முதல்வராக்கியதற்கு லாலு கொடுத்த விளக்கம் என்ன? மண்ணின் மைந்தன் என்று புகழப்பட்ட லாலு மாநில அரசியலில் மண்ணைக் கவ்வியது எப்படி? நட்டத்தில் இயங்கிய ரயில்வே துறையை லாபத்தில் இயங்கவைத்தது எப்படி? தேசியக் கட்சியான காங்கிரஸை லாலு அவமதிப்பதன் பின்னணி என்ன? கிங் மேக்கர் அந்தஸ்துதான் லாலுவின் ஒரே இலக்கா? "ஜோக்கர் என்பார்கள். கிங் மேக்கர் என்பார்கள். பதவியில் இருந்தாலும், இல்லாது போனாலும் இந்திய அரசியலில் லாலு ஒரு தவிர்க்க முடியாத சக்தி. பிகாரின் பின் தங்கிய கிராமம் ஒன்றில், பரம ஏழைக் குடும்பத்தில் பிறந்த லாலு, பிகா ரின் முதல்வரானது சாதாரண விஷயமல்ல. அவரது ஜாதி அரசியல், சாமர்த்தியக் காய் நகர்த்தல்கள், கூட்டணி பேரங்கள், கவிழ்ப்பு சூழ்ச்சிகள், மெகா ஊழல்கள் அனைத்தும், அனைத்துமே இன்றைக்கு நாடோடிக் கதைகள் போல் இந்திய அரசியல் சரித்திரத்துடன் இரண்டறக்கலந்து விட்டன. லாலுவைப் புரிந்துகொண்டால் சமகால இந்திய அரசியல்வாதிகள் அத்தனை பேரையுமே புரிந்துகொண்டுவிடுவதற்குச் சமம். விறுவிறுப்பும், சுவாரஸ்யமும் திடுக்கிடும் திருப்பங்களும் மிகுந்த லாலுவின் வாழ்க்கை, தமிழில் ஒரு நூலாக வெளிவருவது இதுவே முதல்முறை. "
Book Details | |
Book Title | லாலு (Laloo Kzk) |
Author | ஆர்.முத்துக்குமார் (R.Muthukumar) |
ISBN | 9788183681056 |
Publisher | கிழக்கு பதிப்பகம் (Kizhakku Pathippagam) |
Pages | 80 |
Year | 2005 |